இந்தியா

இந்தியாசெய்திகள்

72 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்று 70,421 ஆக சரிவு

இந்தியாவில் தினசரி கரோனா தொற்று கடந்த 72 நாட்களுக்கு பிறகு 70,421 குறைந்துள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது. கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,421 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம்...
இந்தியாசெய்திகள்

கொரோனா உயிரிழப்பு தரவுகளை திருத்தி அமைக்கும் மகாராஷ்டிரா.. பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது

கடந்த சில நாட்களாக, மகாராஷ்டிரா தனது கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை அப்டேட் செய்து வருகிறது, இதனால் அங்கு கொரோனா உயிரிழப்பு 8,800 முதல் 1.08 லட்சம் வரை அதிகரித்துள்ளது, கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு இருந்தது. இதில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று மகாராஷ்டிரா. அங்கு முழு ஊரடங்கிற்கு இணையான 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகே கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது....
இந்தியாசெய்திகள்

கம்ப்யூட்டர் ஊடுருவல்களால் சமூக பாதிப்பு; ஜனநாயக மதிப்புகளை அழிக்கக்கூடாது: பிரதமர் மோடி வலியறுத்தல்

கம்ப்யூட்டர் ஊடுருவல்களால் சமூகங்கள் பாதிக்கப்படுகின்றன, ஜனநாயக மதிப்புகளை மேம்படுத்தும் வழியாக கம்ப்யூட்டர் தகவல்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். ஜி7 உச்சி மாநாட்டின் 2வது நாளில் நடந்த 'ஒன்றாக மீண்டும் கட்டமைத்தல் - திறந்தவெளி சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்கள் மற்றும் மீண்டும் பசுமையை உருவாக்குதல், பருவநிலை மற்றும் இயற்கை' என்ற தலைப்புகளில் நடந்த இரண்டு அமர்வுகளிலும் பிரதமர் ரேந்திர மோடி பங்கேற்றார். திறந்தவெளி...
இந்தியாசெய்திகள்

லட்சத்தீவுக்கு சரக்கு பரிமாற்ற சேவைகள்.. கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு மாற்றம்

லட்சத்தீவுக்கு சரக்கு பரிமாற்ற சேவை அனைத்தும் கேரளாவின் பேப்பூர் துறைமுகத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூரு துறைமுகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சரக்குகளை லட்சத்தீவு மக்களுக்கு அளித்து வந்த பேப்பூர் துறைக அதிகாரிகள் மங்களூரு துறைமுகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். லட்சத்தீவுக்கு சரக்கு பரிமாற்ற சேவைக்காக ஆறு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் பூகோளம் மற்றும் கலாசார பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் தனித்துவமான தீவுக்கூட்டம் தான் லட்சத் தீவு. மிகவும் மிருதுவான பவளத் தீவுக்கூட்டங்கள் உள்ள பகுதியாகும்....
இந்தியாசெய்திகள்

மருந்துகள் முதல் கருவிகள் வரை… கொரோனா சிகிச்சை செலவைக் குறைக்க ஜிஎஸ்டி சலுகைகள்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருந்து பொருட்கள், கருவிகள், ஆக்சிஜன் உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. உடலிலுள்ள ஆக்சிஜன் அளவை கணக்கிட பயன்படுத்தப்படும் பல்ஸ் ஆக்சி மீட்டர் மற்றும் கொரோனா உள்ளதா என பரிசோதனை செய்ய பயன்படுத்தப்படும் RT-PCR டெஸ்ட் கிட் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்படும் என்றும் இன்று நடைபெற்ற 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஜிஎஸ்டி சிகிச்சைக்கான...
இந்தியாசெய்திகள்

முக்கிய துறைகளில் உள்ள அதிகாரிகளின் இ-மெயில் ஐடிகளை ஹேக் செய்ய முயற்சி – மத்திய அரசு எச்சரிக்கை…!

மத்திய அரசின் பாதுகாப்பு துறை உள்ளிட்ட சில முக்கிய துறைகளில் உள்ள அதிகாரிகளின் இ-மெயில் ஐடிகளை ஹேக் செய்ய முயற்சி நடப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள முக்கிய அதிகாரிகளின் தகவல்களை ஹேக்கர்கள் திருடுவதான செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா,பிக் பாஸ்கெட்,டொமினோஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தளங்களிலிருந்து,பல ஆயிரக்கணக்கான இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக தகவல்கள்...
இந்தியாசெய்திகள்

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்பு

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கொரோனா தொற்று, கருப்புப் பூஞ்சை பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் மருந்துகள் மீது விதிக்கப்படும் சரக்கு-சேவை வரியை நீக்குவது தொடா்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் 44-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சா்கள், மத்திய, மாநில அரசுகளின் முக்கிய அதிகாரிகள்...
இந்தியாசெய்திகள்

ஜூலை 12-ல் பூரி ஜெகந்நாதர் யாத்திரை: இந்த ஆண்டும் பக்தர்கள் அனுமதி இல்லை

ஒடிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை உலக புகழ்பெற்றதாகும். கடந்த ஆண்டு கரோனாவின் முதல் அலை காரணமாக ரத யாத்திரை பக்தர்கள் இன்றி நடந்தது. இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை அடுத்த மாதம் (ஜூலை) 12-ம் தேதி நடைபெறுகிறது. ஆனால் கரோனாவின் 2-வது அலை நாடு முழுவதும் பரவி உள்ளது. ஒடிசாவிலும் தொற்று மிகவும் வீரியமாக உள்ளது. எனவே தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் ரத...
இந்தியாசெய்திகள்

பருவமழையை எதிர்கொள்ள ரயில்வே முழுவதும் தயாராக வேண்டும்: பியூஷ் கோயல்

இந்தியா முழுவதுமுள்ள, குறிப்பாக மும்பையில் உள்ள ரயில்வே, பருவமழையை எதிர்கொள்ள முழுவதும் தயாராக வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மழைக் காலத்தை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மும்பை புறநகர் ரயில்வேயில் எடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டத்தில் நேற்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளின் தற்போதைய நிலை, ரயில்கள் சுமுகமாக இயங்குவதற்கான திட்டங்களை ஆய்வு செய்தார். அப்போது மத்திய அமைச்சர் பியூஷ்...
இந்தியாசெய்திகள்

ஜம்மு காஷ்மீர்: சமையல் எரிவாயு கசிவால் தீ விபத்து; அடுத்தடுத்து 20 வீடுகளுக்கு பரவிய தீ

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில், 20 வீடுகள் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்தன. நூர்பா பகுதியில் உள்ள வீடு ஒன்றில், சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியது. குடியிருப்புகளில் இருந்த மக்கள் அவசர அவசரமாக வெளியேறினார். குறுகலான பகுதி என்பதால், தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்திற்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர்,...
1 68 69 70 71 72 82
Page 70 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!