இந்தியா

இந்தியாசெய்திகள்

கேரளாவில் திருமணத்தின்போது அரசு ஆண் ஊழியர்களுக்கு வரதட்சணை மறுப்பு சான்றிதழ் கட்டாயம்

கேரளாவில் அரசுப் பணியில் இருக்கும் ஆண்கள் தங்கள் திருமணத்தின் போது தங்கள் உயர் அதிகாரியிடம் வரதட்சணை மறுப்பு சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வரதட்சணைக் கொடுமைகள் அதிகளவில் நடந்து வருகிறது. அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமதுகானே, வரதட்சணைக்கு எதிராக விழிப்புணர்வூட்ட ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். இந்நிலையில் வரதட்சணையாக அதிக பணம், நகைகளை வாங்குவது அரசுப்பணியாளர்கள் மட்டத்தில்தான் அதிகம்இருப்பதை ஆழமாக உள்வாங்கியிருக்கும் கேரள அரசு இதைக் கட்டுப்படுத்தும் வகையில்...
இந்தியாசெய்திகள்

கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்கிறார்.

கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை, இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்த எடியூரப்பா இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இன்று காலை 11 மணிக்கு பசவராஜ் பொம்மை கர்நாடகாவின் 23வது முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். கர்நாடக மாநிலத்தின்...
இந்தியாசெய்திகள்

புதிதாக ரூபாய் நோட்டு அச்சடிக்கும் திட்டம் இல்லை: அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

புதிதாக ரூபாய் நோட்டு அச்சடிக்கும் திட்டம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இது தொடர்பாக மக்களவை யில் நேற்று அவர் கூறியதாவது: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் (எம்எஸ்எம்இ) உற்பத்தி பொருளை பெற்று அதற்குரிய தொகையை 45 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி நிலுவை தொகை வழங்கப்படுகிறது. ஜிஎஸ்டி தொகை வழங்குவது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில்தான் இறுதி முடிவு...
இந்தியாசெய்திகள்

வாரங்கலில் உள்ள 808 ஆண்டு பழமையான ராமப்பா கோயில் உலக பாரம்பரிய சின்னமானது

தெலங்கானா மாநிலம், வாரங் கலில் காக்கதீயர்கள் காலத்தில் கட்டப்பட்ட 808 ஆண்டுகள் பழமையான ருத்ரேஸ்வரர் கோயில் உள்ளது. கலைநயமிக்க இக்கோயில்,ராமப்பா கோயில் என அழைக்கப் படுகிறது. இக்கோயிலை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. யுனெஸ்கோ பாரம்பரியக் குழுவின் 44-வது கூட்டம் காணொலி மூலம் நடந்து வருகிறது. உலக பாரம்பரிய சின்னங்கள் குறித்து ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் குறித்து இக்குழு விவாதித்து வருகிறது. இந்தியாவின் பட்டியலில் இருந்த...
இந்தியாசெய்திகள்

கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குட்பட்ட டெம்சோக் பகுதியில் மீண்டும் சீனர்களின் கூடாரம்

இந்திய எல்லைக்குட்பட்ட கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் மீண்டும் சீனர்களின் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் சீன ராணுவ வீரர்கள் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி, கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றபோது இந்திய ராணுவம் தடுத்தது. இதில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய...
இந்தியாசெய்திகள்

பெகாஸஸ் விவகாரத்தால் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெகாஸஸ் விவகாரத்தால் அமளி ஏற்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற இன்று காலை கூடியதும், கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு மாநிலங்களவை மற்றும் மக்களவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, ஒலிம்பிக்ஸில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாயி சானுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு, பெகாஸஸ் ஸ்பைவேர் மூலம் ஓட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தை விசாரிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இதையடுத்து மக்களவை பிற்பகல் 2...
இந்தியாசெய்திகள்

இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றிய கார்கில் வெற்றித்திருநாள் இன்று!

இந்தியா - பாகிஸ்தான் எல்லை பிரச்னை என்பது சுதந்திரம் பெற்றது முதலே இருந்து வருகிறது. இந்திய ராணுவம் என்ற ஒரு பெரும்படை இல்லை என்றால் காஷ்மீரை எப்போதோ பாகிஸ்தான் கைப்பற்றியிருக்கும். அப்படிப்பட்ட இந்திய ராணுவத்தின் பலத்தை உலகறியச் செய்த நாள் தான் கார்கில் வெற்றி தினமான ஜூலை 26. பாகிஸ்தான் படைகளை சிதறடித்து இந்திய ராணுவத்தினர் கார்கில் பகுதியை மீட்ட வெற்றித்திருநாள் இந்த நாள்... இந்த கார்கில் போர் பற்றிய...
இந்தியாசெய்திகள்

கேரளாவில் வேகமெடுக்கும் கோவிட் பாதிப்பு: கட்டுப்பாடுகள் அறிவிப்பு

இந்தியாவில் கோவிட் பாதிப்பு நேற்று முன்தினம் 35 ஆயிரமாக இருந்தது. இந்நிலையில் நேற்று 39 ஆயிரத்தை தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,097 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கேரளாவில் தொற்று பாதிப்பு கடந்த 50 நாட்களில் இல்லாத அளவு உயர்ந்ததே தினசரி பாதிப்பு திடீரென அதிகரிக்க முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. அங்கு நேற்று முன்தினம் 12,818 பேர்...
இந்தியாசெய்திகள்

குடியரசுத் தலைவர் மாளிகை; பொதுமக்கள் சுற்றிப் பார்க்க ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் அனுமதி

குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியக வளாகம் பொதுமக்கள் பார்வைக்காக 2021 ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. கோவிட்-19 காரணமாக 2021 ஏப்ரல் 14 முதல் குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியக வளாகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் பார்வைக்காக 2021 ஆகஸ்ட் 1 முதல் அவை மீண்டும் திறக்கப்படுகின்றன. காலை 10.30...
இந்தியாசெய்திகள்

அனில் அம்பானி செல்போனும் ஒட்டு கேட்கப்பட்டதா? நீளும் பட்டியலால் பரபரப்பு!

பெகாசஸ் செயலி மூலம் முக்கிய பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர், திருமுருகன் காந்தி உள்பட பலரது செல் போன்கள் ஒட்டுக் கேட்டதாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஸ்தம்பிக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது...
1 61 62 63 64 65 82
Page 63 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!