இந்தியா

இந்தியாசெய்திகள்

லடாக்கின் எல்லையில் இந்திய, சீன படை வாபஸ்

கடந்த ஆண்டு ஜூன் 15-ம்தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஊடுருவிய சீன வீரர்களை இந்திய வீரர்கள் விரட்டினர். அப்போதுமிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் 60 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் 4 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சீன அரசு தெரிவித்தது. பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் லடாக் எல்லைப் பகுதிகளில் இருந்து இந்திய,...
இந்தியாசெய்திகள்

வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை; நடப்பு ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 9.5% – ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கணிப்பு

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 9.5 சதவீதம் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. வங்கியின் வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ரெபோ விகிதம் 3.35 சதவீதமாகவும் எவ்வித மாற்றமும் இன்றி தொடரும் என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தி லிருந்து இதுவரை வட்டி விகிதத்தில் 115 புள்ளிகள் வரை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. கரோனா வைரஸ்...
இந்தியாசெய்திகள்

தென்னிந்தியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வந்தது..!!

கேரள மாநிலம் மன்னூத்தி - வடக்கன்சேரி பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை அடுத்து குதிரன் மலையைக் குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்தது. இந்த நிலையில் பாலக்காடு - திருச்சூர் 6 வழிச்சாலை சுரங்கப் பணிகள் முடிந்ததை அடுத்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது. அதேநேரம் திருச்சூர் - பாலக்காடு சுரங்கப்பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
இந்தியாசெய்திகள்

வெளிநாடுகளில் இந்திய மாணவர்களின் தனிமைப்படுத்தல் வசதிக்காக ஆதர் பூனவல்லா ரூ.10 கோடி நிதி

வெளிநாடுகளில் படிப்பதற்காக செல்லும் இந்திய மாணவர்களின் கரோனா தனிமைப்படுத்தல் வசதிகளுக்காக சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதர் பூனவல்லா ரூ.10 கோடிநிதி உதவி வழங்கி உள்ளார். கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக, அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி போட்டவர்களை மட்டுமேசுதந்திரமாகப் பயணிக்க உலக நாடுகள் அனுமதிக்கின்றன. இதுவரை பைசர், மாடெர்னா மற்றும் அஸ்ட்ராஜெனிகா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகியவற்றின் தடுப்பூசிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டவர்களுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள்...
இந்தியாசெய்திகள்

முதல் முறையாக முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயாரான விமானம் தாங்கி கப்பல் சோதனை ஓட்டம்

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான முதல் விமானம் தாங்கி கப்பலின் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் விமானம் தாங்கி கப்பலை தயாரிக்க மத்தியஅரசு கடந்த 2003-ம் ஆண்டு அனுமதிவழங்கியது. ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பிலான இதன் கட்டுமானப் பணி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்றது. 40 ஆயிரம் டன் எடை கொண்ட இந்தக் கப்பல் கட்டும் பணி கடந்த ஆண்டு...
இந்தியாசெய்திகள்

எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க மிசோரம் – அசாம் அமைச்சர்கள் இன்று பேச்சு

எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பாக மிசோரம், அசாம் மாநில அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களான அசாமும், மிசோரமும் சுமார் 155 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இரு மாநிலங்கள் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இப்பிரச்சினையை தீர்க்க இரு மாநிலங்களும் கடந்த 1994-ம்ஆண்டு முதல் பல சுற்று பேச்சுவார்த்தையை நடத்தின. இருப்பினும், இதில் உடன்பாடு இதுவரை ஏற்படவில்லை. அதன்பின் இரு மாநில...
இந்தியாசெய்திகள்

14 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த கைதிகளை மாநிலங்களே விடுவிக்கலாம்: உச்சநீதிமன்றம்

அதிகபட்சமாக 14 ஆண்டு கால தண்டனையைப் பூா்த்தி செய்த கைதிகளை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி (சிஆா்பிசி) விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், 14 ஆண்டு தண்டனையை முடிக்காத கைதிக்கு கருணையின் அடிப்படையில் தண்டனையை குறைக்கவோ அல்லது விடுவிக்கவோ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி ஆளுநருக்குத்தான் அதிகாரம் உள்ளது என்றும் இதில் மாநில அரசின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்...
இந்தியாசெய்திகள்

பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சி ஒற்றுமையுடன் உறுதியாக நிற்க வேண்டும் – ராகுல் காந்தி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் சபை நடவடிக்கைகளை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பெகாசஸ், புதிய வேளாண் சட்டங்கள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளையும் முடக்கி வருகின்றனர். இந்த அமளிக்கு மத்தியிலும் முக்கிய மசோதாக்கள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சி...
இந்தியாசெய்திகள்

‘மாஜி’ அதிகாரிக்கு சலுகையா? மெஹபூபா முப்தி கேள்வி!

''பயங்கரவாதிகள் தப்பிக்க உதவிய முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு சலுகை காட்டப்பட்டுள்ளது ஏன்,'' என, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார்.ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளை தன் காரில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றதாக, காஷ்மீரைச் சேர்ந்த முன்னாள் உதவி எஸ்.பி., தவிந்தர் சிங் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அரசியல் சாசனத்தின் 311வது பிரிவின் கீழ் அவரை பதவியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்து...
இந்தியாசெய்திகள்

தென் மாநிலங்களில் கூடுதல் மழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

'தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில், ஆக., - செப்., மாதங்களில் தென்மேற்கு பருவ மழை, வழக்கத்தை விட சற்று கூடுதலாக இருக்கும்' என்ற மகிழ்ச்சியான தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை வழக்கத்துக்கு மாறாக இரண்டு நாள் தாமதமாக, ஜூன் 3ல் கேரளாவில் துவங்கியது. ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் டில்லி தவிர, வட மாநிலங்களின் சில பகுதிகளிலும்,...
1 59 60 61 62 63 82
Page 61 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!