இந்தியா

இந்தியா

ஜஸ்ட் டயல் நிறுவனத்தை மேலாண்மை செய்யும் முழு பொறுப்பையும் ஏற்றது ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் உள்ளூர் தகவல் தேடல் சேவையில் முன்னணியில் இருக்கும் ஜஸ்ட் டயல் நிறுவனங்களுக்கு இடையே கடந்த மாதத்தில் ஒப்பந்தம் உறுதியானது. அதன்படி, ரிலையன்ஸின் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் ஜஸ்ட் டயல் நிறுவனத்திடம் இருந்து 3,497 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை கையகப்படுத்தியுள்ளது. ஜஸ்ட் டயல் நிறுவனத்திடம் இருந்து முதல் கட்டமாக 40.95 விழுக்காடு பங்குகளை கையகப்படுத்துவதாகவும், அதன்பிறகு ஓஃபன் ஆபர் மூலம் 26 விழுக்காடு பங்குகளை...
இந்தியா

தொழில் வளர்ச்சிக்காக புதிய இணையதளம் தொடக்கம்; காஷ்மீர் ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்கும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை

ஜம்மு காஷ்மீரின் தொழில் வளர்ச்சிக்காக புதிய இணையதளத்தைமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்துள்ளார். பல்வேறு தொழில் நடவடிக்கைகள் மூலம் இம்மாநிலத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி முதலீடுகள் வந்து சேரும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் தொழில் வாய்ப்புக்கான புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகமான சாதக அம்சங்களைக் கொண்ட தொழில் கொள்கை தற்போது ஜம்மு காஷ்மீரில் மட்டுமே உள்ளது என்று காணொலி வாயிலாக இணையதளத்தைத்...
இந்தியா

விரைவில் வெளியாகும் தேர்தல் அறிவிப்பு: புதுவை மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் அக்டோபரில் நிறைவு- அடுத்த வாய்ப்புக்கு என்.ஆர்.காங் – பாஜக போட்டி

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவிகாலம் அக்டோபரில் நிறைவடைய உள்ளதால் விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இப்பதவி ஆளுங்கட்சி கூட்டணியிலுள்ள என்.ஆர்.காங்கிரஸுக்கா, பாஜகவுக்காக என்ற கேள்விக்கான விடை விரைவில் தெரியவரும். புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் உள்ளார்.இவர் முதல்வர் ரங்கசாமியின் நெருங்கிய நண்பர். கடந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலின்போது கோகுலகிருஷ்ணனைஎம்பியாக்க ரங்கசாமி விரும்பினார். ஆனால், அப்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால், யாரும் எதிர்பார்க்காத வகையில்என்.ஆர்.காங்கிரஸைச்...
இந்தியா

ஜம்மு – காஷ்மீரில் ஆட்சி அமைப்போம்: என்சிபி தலைவர் ஃபரூக் அப்துல்லா உறுதி

காஷ்மீரில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரமளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய மாநாடு கட்சியின் (என்சிபி) தலைவர் ஃபரூக் அப்துல்லா பேசியதாவது: காஷ்மீரில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் அவர்களை தீவிரவாதிகள் குறி வைக்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க காஷ்மீர் துணைநிலை...
இந்தியா

தெலங்கானாவில் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

தெலங்கானாவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. தெலங்கானா மாநிலம் விகாராபாத்தில் மணமக்கள் நவாஸ் ரெட்டி - பிரவல்லிகா ஆகியோருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு இவர்கள் காரில் ஹைதராபாத் நோக்கி வந்துகொண்டிருந்தனர். இவர்களுடன் மேலும் 4 பேர் காரில் இருந்தனர். வழியில் இந்த கார் வெள்ளத்தில் சிக்கியதில் அனைவரும் நீரில் மூழ்கினர். இதில் பிரவல்லிகா மட்டும் பிறகு சடலமாக...
இந்தியா

திருமண மண்டபங்களை குத்தகைக்கு விட ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் முடிவு

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் 299 திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் 177 திருமண மண்டபங்கள் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ளன. ஆனால், கோடிக்கணக்கில் செலவு செய்து திருமண மண்டபங்கள் கட்டினாலும் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால், இதுகுறித்து தேவஸ்தானம் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டது. இவர்கள் கொடுத்த அறிக்கை தேவஸ்தான அதிகாரிகளை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சில திருமண மண்டபங்களில் அவ்வூர் மக்கள் மாடுகளை கட்டி அவைகளை...
இந்தியா

வியத்நாமுக்கு 100 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இந்தியா வழங்கியது

தென்கிழக்கு ஆசிய நாடான வியத்நாமுக்கு 100 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன், 300 ஆக்சிஜன் கன்டெய்னா்களை இந்தியா வழங்கியுள்ளது. அந்நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு உதவும் வகையில் இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ஐராவதி போா்க் கப்பல் மூலம் வியத்நாமின் ஹோ சி மின் நகர துறைமுகத்துக்கு ஆக்சிஜன் கன்டெய்னா்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவை வியத்நாமுக்கு சென்றடைந்த தகவலை வெளியுறவுத் துறை அமைச்சா்...
இந்தியா

முப்படைகளும் அடங்கிய தனிப்படை அமைக்க பரிசீலனை: ராஜ்நாத் சிங்

முப்படைகளும் அடங்கிய ஒருங்கிணைந்த படைப்பிரிவை உருவாக்குவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அங்கு உரையாற்றிய அவர், நமது அண்டை நாடு ஒன்று, இரண்டு போர்களில் தோற்ற நிலையில், மறைமுகமான யுத்தத்தை தொடுத்து வருவதாக பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல் குற்றஞ்சாட்டினார். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாட்டிலேயே...
இந்தியா

மம்தா சகோதரி அழைத்ததால் நான் வந்தேன்.. 7 வருடத்துக்கு பிறகு மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்த சிகா மித்ரா

முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிகா மித்ரா 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் அந்த கட்சியில் இணைந்தார். மேற்கு வங்க காங்கிரஸின் முன்னாள் தலைவர் மறைந்த சோம் மித்ராவின் மனைவி சிகா மித்ரா. இவர் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆவார். 2014ம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சவுரிங்கீ சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் (எம்.எல்.ஏ. பதவி) பதவியை ராஜினாமா செய்து விட்டு...
இந்தியா

சுல்தான்பூர் மாவட்ட பெயர் குஷ் பவன்பூர்: உத்தர பிரதேச மாநில அரசு முடிவு

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதலாக, மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. அலகாபாத் நகரின் பெயர் பிரயாக்ராஜ் எனவும் ஃபைசாபாத் மாவட்டத்திற்கு அயோத்யா எனவும் பெயர் சூட்டப்பட்டது. உ.பி.யில் முகலாயர்களின் ஆட்சிக் காலத்தின் போது பல மாவட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டதாகவும், தற்போது அப்பகுதிகளுக்கு அவற்றின் பழைய பெயர்கள் சூட்டப்படுவதாகவும் அரசு தெரிவித்தது. இந்த வரிசையில் தற்போது சுல்தான்பூர் மாவட்டத்தின் பெயர்...
1 54 55 56 57 58 82
Page 56 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!