இந்தியா

இந்தியா

ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிக்கு நீதிமன்றம் தடை

நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்படுவதாக கூறி, கொண்டுவரப்பட்ட, ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதியில் ஒரு உட்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்படுவதாகக் கூறி, அதை தடுக்கும் நோக்கில் கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள்...
இந்தியா

நகர்புற திட்டமிடலை கவனிக்காவிடில் வளர்ச்சி வாய்ப்பை இழப்போம்: நிடி ஆயோக்

இந்தியாவின் நகர்ப்புற திட்டமிடலில் உள்ள இடைவெளிகளை உடனடியாக நிரப்ப வேண்டும், இல்லையென்றால் நாடு விரைவான வளர்ச்சி வாய்ப்பை இழக்க நேரிடும் என்று நிடி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறினார்.நிடி ஆயோக் அமைப்பு நேற்று 'இந்திய நகர்ப்புற திட்டமிடல் திறனில் சீர்திருத்தங்கள்' என்ற தலைப்பில் விரிவான அறிக்கையை சமர்பித்தது. இந்த அறிக்கையை நிடி ஆயோக் மற்றும் மத்திய அமைச்சகங்கள் இணைந்து துறை சார் நிபுணர்களுடன் 9 மாதங்கள் விவாதித்து...
இந்தியா

உ.பி.யில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்: இரு முக்கிய திட்டங்களை அறிவித்த பிரதமர் மோடி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரண்டு முக்கிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் ஆட்சியை தக்கவைக்க பாரதிய ஜனதாக கட்சி பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அலிகர் நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அலிகரில் பாதுகாப்பு துறைக்கான கருவிகளை உருவாக்கும்...
இந்தியா

நெருங்கும் மக்களவை தேர்தல்: பாஜகவுக்கு எதிராக புதிய ஆயுதத்தைக் கையில் எடுக்கும் காங்கிரஸ்

விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகிய விவகாரங்களை முன்னிலைப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும், போராட்டங்கள் எங்கு நடைபெறும் எப்போது நடைபெறும் போன்ற முடிவுகளை சோனியா காந்தி எடுப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பாஜக அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தில் காங்கிரஸ் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவை தான் முதன்மை பிரச்சினைகளாகக் கருதப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை காங்கிரஸ்...
இந்தியா

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் மழை, வெள்ளத்தில் சிக்கி 6,800 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் மழை, வெள்ளம் தொடர்பான தரவுகளை நடந்துமுடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், கடந்த 2018 ஏப்ரல்முதல் கடந்த மார்ச் 21-ம் தேதி வரையிலான மூன்று ஆண்டுகளில் மழை தொடர்பான பேரிடர்களுக்கு 6,811 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச உயிரிழப்பை சந்தித்த மாநிலங்களில் முதலிடத்தில் மேற்கு வங்கம் உள்ளது. அங்கு 964 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் ம.பி. (917), கேரளா (708)...
இந்தியா

விவசாயிகள் தொடர் போராட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு; 4 மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

விவசாயிகளின் போராட்டத்தால் தொழில் துறை, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து பதில் அளிக்குமாறு 4 மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பர் முதல் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக டெல்லி, ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை தலைவர்களுக்கு தேசிய மனித...
இந்தியா

இடைத்தேர்தலில் மம்தாவுக்கு எதிராக களமிறங்கும் பாஜக வேட்பாளர் பிரியங்கா..

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரியங்கா டிபிரேவால் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சி அமைத்த போதிலும், மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார். எனவே, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பவானிபூர் சட்டப்பேரவை உறுப்பினர்...
இந்தியா

‘தொழில் துறை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு’

''தொழில் துறை மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்திய தொழில் கூட்டமைப்பு, இந்திய வர்த்கம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு நிர்வாகிகளுடன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசியதாவது:தொழில் துறை மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கடன் வசதி கிடைக்கவில்லை என,...
இந்தியா

குஜராத் புதிய முதல்வர் பூபேந்திர படேல்: இன்று பதவியேற்கிறார்

குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் (59) தேர்வு செய்யப்பட்டுள்ளார். குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2016 முதல் அந்த கட்சியின் மூத்த தலைவர் விஜய் ருபானி மாநில முதல்வராக பதவி வகித்து வந்தார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பாஜக எம்எல் ஏக்களின் கூட்டம் காந்திநகரில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மேலிட...
இந்தியா

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது தேசிய உளவு தொகுப்பு அமைப்பு

'பயங்கரவாதம், பொருளாதார குற்றங்கள் உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையிலான, 'நேட்கிரிட்' எனப்படும் தேசிய உளவு தொகுப்பு அமைப்பை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் அறிமுகம் செய்வார்' என, தகவல்கள் தெரிவிக்கின்றன.கண்காணிப்புகடந்த 2008 நவ., 11ல் மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து, பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில், உளவு அமைப்புகள் உட்பட அரசின் பல அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில், நேட்கிரிட் அமைப்பை உருவாக்க 2010ல் முடிவு செய்யப்பட்டது.இந்த புதிய...
1 51 52 53 54 55 82
Page 53 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!