இந்தியா

இந்தியா

திருமலையில் அக்.7 முதல் 15-ம் தேதி வரை பக்தர்கள் இன்றி பிரம்மோற்சவம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நடத்தப்படும். காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் பல்வேறு வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். பிரம்மோற்சவ விழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள்குவிவார்கள். ஆனால், தற்போது கரோனா பரவல் காரணமாக, மத்திய, மாநில அரசுகளின் நிபந்தனைகளின்படி, இந்த ஆண்டும், கடந்த ஆண்டைப்போலவே வாகன சேவைகளை ரத்து செய்து,பிரம்மோற்சவத்தை...
இந்தியா

கர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை அமைச்சர் தகவல்

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று பாஜக எம்எல்ஏ கூலிஹட்டி சேகர், ''இந்துக்கள் அதிகளவில் மதம் மாற்றப்படுகிறார்கள். திரு மணத்துக்காகவும் இத்தகைய மதமாற்றம் நடைபெறுகிறது. இதை அரசு தடுக்க வேண்டும்'' என கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, ''கர்நாடகாவில் கட்டாய மதமாற்றத்தை தடுப்பதற்கு விரைவில் தனிச்சட்டம்கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் தங்களது மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக அதிகளவில் மதமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். எனது தொகுதியில் தலித்...
இந்தியா

உத்தரகாண்ட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

உத்தரகாண்ட் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது பல மாநிலங்களில் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் சர்த்கம் யாத்திரை நடத்த அம்மாநில உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹரித்வாருக்கு வந்தவண்ணம் இருந்தனர். இதனால், அங்கு கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில், கொரோனா...
இந்தியா

அரசு அதிகாரிகள் குறித்த உமா பாரதியின் பேச்சால் சர்ச்சை

போபால்-மத்திய பிரதேசத்தின் போபாலில் வசிக்கும் பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி, 62, இதற்கு முன் முதல்வர், மத்திய அமைச்சர் பதவிகளை வகித்தவர். அரசு அதிகாரிகள் தொடர்பாக அவர் பேசும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.அதில் அவர் கூறுவதாவது:மத்திய அமைச்சர், முதல்வர் என 11 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளேன். ஒரு பிரச்னை தொடர்பாக நாங்கள் விவாதித்து நடவடிக்கை மேற்கொள்வோம். அதிகாரிகள் எங்களை சுற்றி நிற்பர். அதிகாரிகளுக்கு...
இந்தியா

போலீஸாரின் மன அழுத்தத்தை குறைக்க சிறப்பு பயிற்சிக்கான டிப்ளமோ: புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் டிஜிபி

போலீஸாரின் மன அழுத்தத்தைக் குறைக்க பயிற்சி கொடுக்கும் நபர்களுக்கான டிப்ளமோ படிப்பு திட்டத்தை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் போலீஸாருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் 'நிறைவு வாழ்வு'பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது இந்த பயிற்சிக்கென தனியார் நபர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மூலம் போலீஸாருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. போலீஸாருக்கு போலீஸாரே பயிற்சி அளித்தால், அவர்களின் பிரச்சினைகளை எளிதாக புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல மன...
இந்தியா

முன்னாள் கர்நாடக முதல்வரின் சர்ச்சை வீடியோ; இணையத்தில் பரபரப்பு

முன்னாள் கர்நாடக முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சதானந்த கவுடா குறித்த சர்ச்சை வீடியோ இணையத்தில் வெளியானது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், முன்னாள் கர்நாடக (Karnataka) முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சதானந்த கவுடா (Sadananda Gowda) இந்த சம்பவம் தொடர்பாக சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் இது பொய்யான வீடியோ என மறுத்துள்ள சதானந்த கவுடா, தனக்கு இருக்கும்...
இந்தியா

பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சரண்ஜித் சிங் இன்று பதவியேற்பு

பஞ்சாப் மாநில புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சரண்ஜித் சிங் இன்று காலை பதவியேற்றுக் கொள்கிறார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, முதலமைச்சர் பதவியை அமரிந்தர் சிங் திடீரென ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்தன. இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக 58 வயதான சரண்ஜித்...
இந்தியா

போராட்டமாக மாறிய சுரேஷ் கோபியின் சல்யூட் விவகாரம் .

மலையாள நடிகர் மற்றும் பாஜாகவின் திரிச்சூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் கோபி உதவி ஆய்வாளரை 'தன்னை சல்யூட் செய்யுமாறு' கேட்டுகொண்டது தற்போது கேரளாவில் பிரச்சினையை கிளப்பியுள்ளது . நடிகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் கோபி கடந்த சில நாட்களுக்கு முன் திரிச்சூர் சென்றிருந்தபோது அங்கு செல்லும் வழியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் தன்னை பார்த்தும் சல்யூட் வைக்காததால் தானாக அவரிடம் சல்யூட் வைக்குமாறு கேட்டுள்ளார் ....
இந்தியா

பிற மாநிலங்களைவிட உத்தரப்பிரதேசத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைவு – யோகி பெருமிதம்!

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் உத்தரப்பிரதேசத்தில் வேலைவாய்ப்பின்மை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கடன்களையும் மற்றும் விஷ்வகர்மா ஷ்ரம் சம்மன் யோஜனா திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மொத்த உலகமும் கொரோனா பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட வேண்டிய சூழல்...
இந்தியா

மாநிலங்களவைத் தேர்தலுக்கு பின் புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு: வேட்பாளர்கள் செலவுத் தொகை உயர்வு; முதன் முறையாக நோட்டாவும் அறிமுகம்

புதுச்சேரியில் மாநிலங்களவைத் தேர்தலுக்குப் பிறகு உள்ளாட்சித்தேர்தல் தேதி அறிவிக்கப்பட வுள்ளது. முதன் முறையாக மின் னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டாவும் உள்ளாட்சித் தேர்தலில் அறிமுகமாகிறது. வேட்பாளர்கள் செலவுத் தொகை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதற்காக நகராட்சி, கொம்யூன் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் விரைவுப்படுத் தியுள்ளது. வார்டு வரையறை, வாக்காளர் பட்டியல், இடஒதுக்கீடுவாரியாக வார்டுகள் ஒதுக்கீடு...
1 50 51 52 53 54 82
Page 52 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!