இந்தியா

இந்தியா

பெண்கள் தலைமையிலான வளா்ச்சியே இலக்கு; குடியரசுத் தலைவா்

'பெண்களின் வளா்ச்சி என்பதிலிருந்து பெண்கள் தலைமையிலான வளா்ச்சி என உயா்த்துவதே நமது இலக்கு' என்றாா் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த். நீதித் துறையில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும்விதமாக அவா் இவ்வாறு கூறினாா். தேசிய சட்ட சேவைகள் ஆணையம் சாா்பில் நாடு தழுவிய சட்ட விழிப்புணா்வு பிரசாரம் தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது. சுதந்திர தின பவள விழாவின் ஒரு பகுதியாக 6 வாரம் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை தொடங்கிவைத்து...
இந்தியா

பவானிபூா் இடைத்தோதல்: இன்று வாக்கு எண்ணிக்கை

மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூா் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தோதலில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (அக். 3) எண்ணப்படுகின்றன. முதல்வா் மம்தா பானா்ஜி போட்டியிட்ட தொகுதி என்பதால் பவானிபூா் தொகுதி தோதல் முடிவுகள் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோதலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி தோல்வியுற்றாா். இருப்பினும் முதல்வராக அவா் பதவியேற்றாா். முதல்வராகப் பதவியேற்ற 6...
இந்தியா

மாநில பேரிடர் மீட்பு நிதி; ரூ.7,274 கோடி ஒதுக்கீடு

பேரிடர் மீட்பு நிதியாக 7,274 கோடி ரூபாயை 23 மாநிலங்களுக்கு முன்கூட்டியே அளிக்க, மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது.மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:மாநிலங்களில் ஏற்படும் பேரிடர் மற்றும் அவசர காலங்களை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு நிதியத்தில் இருந்து மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான இரண்டாவது தவணையாக 1,599.20 கோடி ரூபாய் ஏற்கனவே ஐந்து மாநிலங்களுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த...
இந்தியா

அமெரிக்க முப்படை தளபதியுடன் இந்திய முப்படைத் தளபதி சந்திப்பு

அமெரிக்காவின் முப்படை தளபதி மாா்க் மில்லியை அந்நாட்டுத் தலைநகா் வாஷிங்டனில் இந்திய முப்படைத் தளபதி விபின் ராவத் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். இந்த சந்திப்பு அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகனில் வியாழக்கிழமை நடைபெற்றது. அண்மையில் அமெரிக்காவில் அந்நாட்டு அதிபா் ஜோ பைடனை பிரதமா் மோடி சந்தித்துப் பேசினா். அப்போது இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே மிகப் பெரிய அளவில் ஒத்துழைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தை இருவரும் வலியுறுத்தினா். இதனைத்...
இந்தியா

மூத்த குடிமக்களுக்கு தனி ‘ஹெல்ப்லைன்’- வெங்கய்ய நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார்

மூத்த குடிமக்களுக்கு 'எல்டர் லைன்' என்ற பெயரில் 'ஹெல்ப் லைன்' வசதியை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 'எல்டர் லைன்' என்ற பெயரில் ஹெல்ப் லைன் வசதியை மத்திய அதிகாரமளித்தல் மற்றும் சமூகநீதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. முதியோருக்கான சர்வதேச தினமான இன்று (அக்.1), இந்த வசதியை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள...
இந்தியா

மும்பை உட்பட 4 உயர் நீதிமன்றங்களில் 16 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

மும்பை உட்பட 4 உயர் நீதிமன்றங்களில் 16 பேரை நீதிபதி களாக நியமிக்க, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்ககொலீஜியம் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, யு.யு.லலித் மற்றும் ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் உள்ளனர். மூன்று உறுப்பினர்கள் கொண்ட இந்த கொலீஜியம், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க பெயர்களை பரிந்துரை செய்யும். இந்நிலையில், தலைமை நீதிபதி...
இந்தியா

ரூ.13 ஆயிரம் கோடி செலவில் ராணுவ கொள்முதல்: அமைச்சகம் ஒப்புதல்

ராணுவத்துக்கு தேவையான ஹெலிகாப்டர்கள், ராக்கெட் வெடிபொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை, 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 25, ஏ.எல்.ஹெச்., -மார்க் 3 ஹெலிகாப்டர்கள், ராக்கெட் வெடி பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்கள் கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.'இதன் மொத்த மதிப்பு 13 ஆயிரத்து, 165...
இந்தியா

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் 22 தொகுதிகளில் போட்டி – சிவசேனா அறிவிப்பு

கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் 22 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக சிவசேனா அறிவித்துள்ளது. கோவா தலைநகர் பனாஜிக்கு சென்றுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத், கோவாவும் மகாராஷ்ட்ராவும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான உறவை பகிர்ந்து கொண்டிருப்பதாகக் கூறினார். சிவசேனா கட்சி மகாராஷ்டிராவை ஆள்வதைப் போன்று கோவாவையும் ஆளும் என்று அவர் குறிப்பிட்டார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் போட்டியிட முடியுமெனில், கோவாவை ஒட்டியுள்ள மகாராஷ்டிராவை...
இந்தியா

ஹெலிகாப்டர் மூலம் ஏழுமலையானை தரிசிக்க கட்டணம் ரூ.1,11,116: கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்ப வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

திருமலை திருப்பதி தேவஸ் தானம், ஸ்ரீவாணி அறக்கட்டளை பெயரில் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் யார் வேண்டுமானாலும், ரூ.10,500 செலுத்தி இந்த டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். இது ஆன் லைன் மூலமாக கூட கிடைக்கிறது. ரூ.10,000 நன்கொடையாகவும், ரூ.500 டிக்கெட் விலை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டை பெற்ற பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசன ஏற்பாடு களை தேவஸ்தானமே செய்துகொடுக்கிறது. அப்படி இருக்கையில், இதுபோன்ற விளம்பரம் செய்வோர் ஸ்ரீவாணி அறக்கட்டளை...
இந்தியா

புதுவை ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ளாட்சித் தேர்தல் இடபங்கீடில் இழுபறி: ஆளுநருடன் முதல்வர் திடீர் சந்திப்பு

புதுச்சேரியில் ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ளாட்சித் தேர்தல் இட பங்கீடு சுமூகமாக முடியாத சூழலில் ஆளுநர் தமிழிசையை முதல்வர் ரங்கசாமி சந்தித்துப் பேசினார். புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள் ளதால் கூட்டணி, இட பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் அமைந்த கூட்டணியே தொடரும் என்று ஆளும்கட்சி தரப்பும், எதிர்க்கட்சித் தரப்பும் தெரிவித்தன. அதில் இட பங்கீடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தை தேசிய ஜனநாயக...
1 48 49 50 51 52 82
Page 50 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!