இந்தியா

இந்தியா

பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பிஎஸ்பி உடன் கூட்டணி இல்லை: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் உறுதி

உத்தரபிரதேச முன்னாள் முதல்வரான அகிலேஷ் சிங், கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸுடன் கூட்டணி வைத்தார். இங்குள்ள 403 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 103 தொகுதிகளை ஒதுக்கினார். இதில் காங்கிரஸ் முந்தைய தேர்தலை விடக் குறைவாக, வெறும் 7 இடங்களில் மட்டுமே வென்றது. இதனால் காங்கிரஸுடன் இனி கூட்டணி இல்லை என அகிலேஷ் அப்போது அறிவித்தார். 2019 மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் தனது முக்கிய எதிர்க்கட்சியான, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன்...
இந்தியா

நிலக்கரித் தட்டுப்பாடு: 115 அனல்மில் உற்பத்தி நிலையங்கள் முடங்கும் அபாயம் – மத்திய மின்சார ஆணையம் எச்சரிக்கை

இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாடு தொடர்பாக துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே தட்டுப்பாடு காரணமாக, 115 அனல் மின் உற்பத்தி நிலையங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. நிலக்கரி இருப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய மின்சார ஆணையம், நாட்டிலுள்ள மொத்த 135 அனல் மின் உற்பத்தி நிலையங்களில் 115-ல் கடுமையான நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதில் 17...
இந்தியா

சா்வதேச நிறுவனங்களுடன் நிதியமைச்சா் நிா்மலா ஆலோசனை

இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து சா்வதேச நிறுவனங்களின் தலைவா்களுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினாா். உலக வங்கி-சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) ஆண்டுக் கூட்டம், ஜி20 நாடுகளின் நிதியமைச்சா்கள்-மத்திய வங்கிகளின் தலைவா்கள் கூட்டம் உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்காக அமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை அமெரிக்கா சென்றடைந்தாா். இந்நிலையில், சா்வதேச நிறுவனங்களின் தலைவா்களை பாஸ்டன் நகரில் அவா் சந்தித்துப் பேசினாா். அப்போது, முதலீடுகளை மேற்கொள்வது தொடா்பாக இந்தியாவில் காணப்படும்...
இந்தியா

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியீடு; பெரும்பான்மை இடங்களில் திமுக வெற்றி: வாக்குச்சீட்டு முறை என்பதால் எண்ணும் பணி தாமதம்

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சில் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சில்களில் பெரும்பான்மை இடங்களை ஆளும் திமுக கைப்பற்றியுள்ளது. மேலும், அதிகப்படியான இடங்களில் முன் னிலை வகிக்கிறது. வாக்குச்சீட்டு முறை என்பதால் எண்ணும் பணி தாமத மாகியுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல் பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத் தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக...
இந்தியா

பிரபல நடிகர் நெடுமுடி வேணு மரணம்: அரசு மரியாதையுடன் இன்று உடல் தகனம்

பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு (73) நேற்று காலமானார். மலையாள சினிமாவில் கடந்த 1978ல் அரவிந்தன் இயக்கிய தம்பு என்ற படத்தில் அறிமுகமானவர் நெடுமுடி வேணு. பின்னர் நாயகன், வில்லன் மற்றும் குணசித்திர வேடம் என 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பஞ்சவடிபாலம், காதோடு காதோரம், தேவாசுரம், பரதன் உட்பட ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார். மலையாளத்தில் ஒரு படத்தை இயக்கியுள்ள இவர், 7 படங்களுக்கு...
இந்தியா

தீவிரவாதிகளுடன் என்கவுன்ட்டர்: காஷ்மீரில் ராணுவ அதிகாரி 4 வீரர்கள் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரில் கடந்த வாரம் மருந்துக் கடை உரிமையாளர், சாலையோர வியாபாரி, டாக்ஸி ஓட்டுநர் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் உட்பட 7 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பகுதியில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் நான்கைந்து தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியதாக உளவுத் துறை தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில், பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் பகுதியில் அந்தத் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக...
இந்தியா

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் பங்கேற்ற கேளிக்கை விருந்தில் சானிட்டரி நாப்கினில் போதை பொருள் மறைப்பு

மும்பை சொகுசு கப்பலில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் பங்கேற்ற கேளிக்கை விருந்தில் சானிட்டரி நாப்கினில் போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை என்சிபி அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். கடந்த 2-ம் தேதி மும்பையில் இருந்து கோவாவுக்கு புறப்பட்ட கார்டிலியா சொகுசு கப்பலில் கேளிக்கை விருந்து நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான்உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். அவர்கள் போதை பொருட்களை பயன்படுத்தினர்....
இந்தியா

நிலக்கரி பற்றாக்குறை இருப்பதாக தேவையற்ற பீதி உருவாக்கப்படுகிறது: மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் விளக்கம்

மின் உற்பத்தி குறித்து நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட 6 மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ளன. மின் நெருக்கடி குறித்து பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அண்மையில் எழுதிய கடிதத்தில், மின்சார ஆலைகளுக்கு விநியோ கம் செய்யப்படும் நிலக்கரி அதிகரிக்கப்படாவிட்டால், தேசிய தலைநகர் இருளில் மூழ்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் நேற்று கூறியதாவது: மத்திய அரசிடம் போதுமான அளவில் மின்சாரம் உள்ளது....
இந்தியா

எல்லையில் மீண்டும் சீனா அத்துமீறல்: இந்திய படையினருடன் கைகலப்பு..

இந்தியா-சீனா இடையே 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தொலைவுக்கு எல்லைப்பகுதி உள்ளது. எல்லைப்பகுதி குறித்து முறையாக வரையறுக்கப்படாத நிலையில், சீன ராணுவம் அடுத்தடுத்து அத்துமீறி வருகிறது. இந்நிலையில், அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள பம் லா கணவாய் மற்றும் திபெத்தின் யாங்சே இடையேயான எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் கடந்த வாரத்தில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்தனர். திபெத் வழியாக இந்தியப் பகுதிக்குள் சுமார் 200 சீன வீரர்கள் நுழைந்ததாகவும், பயன்படுத்தப்படாமல்...
இந்தியா

ஆதாரமின்றி நடவடிக்கை இல்லை: யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று அளித்தபேட்டியில் கூறியிருப்பதாவது: லக்கிம்பூர் கெரியில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இந்த வழக்கை மிகவும் ஆழமாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஜனநாயகத்தில் என்றைக்கும் வன்முறைக்கு இடம் கிடையாது. அனைவரையும் பாதுகாக்கும் வகையில் சட்டம் இருக்கும்போது, அதை யாரும் கையில் எடுக்க வேண்டிய அவசியமில்லை. விவசாயிகள் மீது கார் மோதிய விவகாரத்தில் வீடியோ ஆதாரத்தை யார் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை...
1 46 47 48 49 50 82
Page 48 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!