இந்தியா

இந்தியா

சிறப்பு புலனாய்வு படை மீண்டும் காஷ்மீருக்கு விரைவு! தாக்குதல் குறித்து விசாரிக்க அமித் ஷா உத்தரவு

ஜம்மு - காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் பயங்கரவாதிகளால் தொடர்ச்சியாக குறிவைத்து கொல்லப்படுவதை விசாரிக்க சென்று, சமீபத்தில் டில்லி திரும்பிய சிறப்பு புலனாய்வு படையினரை, மீண்டும் காஷ்மீர் சென்று விசாரணையை தொடரும்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 2019ல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இரு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு...
இந்தியா

சர்ச்சை சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு ஆயுள் தண்டை – சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சர்ச்சை சாமியார் குர்மீத் ராம் ரஹீம், தனது இரண்டு பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 2002 ஆம் ஆண்டு, குர்மீத் ராம் ரஹீமின் தேரா சச்சா சவுதா சிர்ஸா என்ற அமைப்பின் மேலாளராக இருந்த ரஞ்சித் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரித்த சிபிஐ, 'தேரா சச்சா அமைப்பில்...
இந்தியா

கேரளாவில் கடும் மழை: சபரிமலை கோயிலுக்கு செல்ல 21-ம் தேதி வரை தடை

கேரளாவில் கனமழை பெய்துவருவதால் சபரிமலை கோயிலுக்கு செல்ல, வரும் 21 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அனுமதியை ரத்து செய்து அம்மாநில வருவாய்த்துறை மந்திரி கே.ராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். துலா மாதப்பிறப்பை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோயில், கடந்த 16 ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. ஆனால் அன்று பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, அக்-17 ஆம்...
இந்தியா

பிரிவினைவாத தலைவர் சயத் அலி கிலானியின் பேரன் அரசு வேலையிலிருந்து நீக்கம்: ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் நடவடிக்கை

பிரிவினைவாத தலைவரும், பாகிஸ்தான்ஆதரவாளரான சயத் அலி கிலானியின் பேரன் தீவிரவாத செயல்களுக்கு உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பெயர் அரசு வேலையிலிருந்து நீக்கப்பட்டார். சயத் அலி கிலானி கடந்த செப்டம்பர் 1-ம் தேதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. சயத் அலி கிலானியின் பேரன் அனீஸ் உஸ் இல்ஸாம் மட்டுமல்லாது, தோடா பகுதியைச்சேர்ந்த ஒரு ஆசிரியர், ஜம்மு காஷ்மீர் அரசில்ப ணியாற்றும் இரு அரசு ஊழியர்கள் ஆகியோர் பதவிநீக்கம் செய்யப்பட்டனர். அனீஸ்...
இந்தியா

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்தல் எப்போது? முழு விவரங்கள் வெளியீடு

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்2022ம் ஆண்டு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நேற்று நடந்தது முடிந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் அமைப்பு ரீதியாக பல்வேறு நிலைகளிலும் தேர்தல் தேதிக்கான ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து, அதிகாரபூர்வமாக வெளியிடப்ட்டது. காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் முடிந்தபின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நிருபர்களுக்கு அளித்த...
இந்தியா

மிகப்பெரிய ராணுவ சக்தியாக இந்தியாவை உருவாக்குவதே இலக்கு: பிரதமர் நரேந்திர மோடி!

உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக இந்தியாவை உருவாக்குவதே அரசின் இலக்கு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை 7 புதிய நிறுவனங்களாக பிரித்து, பிரதமர் மோடி அவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார். டெல்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வளாகத்தில் இந்த விழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி கனரக வாகன தொழிற்சாலையிலிருந்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் அம்பத்தூர் துணை...
இந்தியா

உத்தர பிரதேசத்தின் 58,000 கிராமங்களில் விவசாயிகளிடம் சாதனை விளக்க கூட்டங்கள்: அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கு பாஜக தலைமை உத்தரவு

உத்தர பிரதேசத்தின் 58,000 கிராமங் களை சேர்ந்த விவசாயிகளிடம் அரசின் சாதனைகளை விளக் கும் கூட்டங்களை பாஜக தொடங் கியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கான இந்தக் கூட்டங்களில், விவசாயிகள் போராட்டத்தை முறியடிக்க விழிப்புணர்வையும் பாஜக ஏற்படுத்த உள்ளது. உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரக் கூட்டங்களை பாஜக தொடங்கி விட்டது. டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டமும், லக்கிம்பூர் கெரி சம்பவமும் பாஜகவின்...
இந்தியா

100 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி; சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு

கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசி 'டோஸ்' அடுத்த வாரத்தில் 100 கோடியை எட்டி சாதனை படைக்க உள்ளது; இதை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய சுகாதாரத் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுதும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இதுவரை 97 கோடி டோசுக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் 100...
இந்தியா

மோடி தேசத்திலிருந்து வருகிறீர்களா எனக் கேட்கிறார்கள்; இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பை மோடி உயர்த்தியுள்ளார்: அமித் ஷா பெருமிதம்

பிரதமர் மோடியால் இந்தியாவின் பாஸ்போர்ட் மதிப்பு உயர்ந்துள்ளது. மோடி நாட்டிலிருந்து வருகிறீர்களா என வெளிநாட்டினர் வியப்புடன் கேட்கிறார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்தோடு தெரிவித்தார். கோவாவின் பானாஜி நகரில் பாஜகவின் காரியகர்த்தா சம்மேளன் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியாவது: கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்காவிட்டால்,...
இந்தியா

இலங்கை அதிபா், பிரதமருடன்இந்திய ராணுவ தலைமைத் தளபதி சந்திப்பு

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்சவை இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே புதன்கிழமை சந்தித்தாா். இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே 4 நாள் பயணமாக இலங்கைச் சென்றுள்ளாா். அங்கு அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்சவை அவா் புதன்கிழமை சந்தித்தாா். அப்போது இந்தியா, இலங்கை இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த கோத்தபய ராஜபட்சவின் வழிகாட்டுதலை அவா் கோரினாா். பிராந்தியத்தின் பாதுகாப்பு கருதி இருநாடுகளிலும் ஸ்திரத்தன்மை...
1 45 46 47 48 49 82
Page 47 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!