இந்தியா

இந்தியா

வன்முறையைத் தூண்டிய எதிா்க்கட்சிகளிடம் இருந்து விலகியிருங்கள்

உத்தர பிரதேசத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் கடவுள் ராமருக்கு துரோகம் விளைவித்து, வன்முறையைத் தூண்டிய எதிா்க்கட்சிகளிடம் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று மக்களுக்கு மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளாா். உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாஜகவின் பிற்படுத்தப்பட்ட பிரிவு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் விஸ்வகா்மா சமூகத்தினரிடையே முதல்வா் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: கடவுள் ராமரைக் குறித்து சிந்திக்காத முன்பு...
இந்தியா

வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டம்; நேர்மையான என்ஜிஓ-க்கள் அச்சப்பட வேண்டியதில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

"வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைக் கண்டு, நேர்மையான தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓ) அச்சப்பட தேவையில்லை" என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டத்தில் மத்திய அரசு கடந்த ஆண்டு சில திருத்தங்களை மேற்கொண்டது. இதற்குஎதிராக பல தொண்டு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த புதன்கிழமை மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது....
இந்தியா

அக்டோபர் 30-ல் இடைத்தேர்தல்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

வரும் 30-ம் தேதி நாடு முழு வதுமாக மொத்தம் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இடைத்தேர்தல் நடத்தப்படும் மாவட்டம், தொகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் சில அரசியல் கட்சிகள், வேட்பாளர் கள் பிரச்சார நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதாக ஆணையத் தின் கவனத்துக்கு வந்துள்ளது. இதுசம்பந்தமாக அரசியல் கட்சிகள்,வேட்பாளர்கள்...
இந்தியா

ராணுவ தளவாட ஏற்றுமதியில் 25 முன்னணி நாடுகள் பட்டியலில் இந்தியா: அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யும் 25 முன்னணி நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் 2020-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். இந்த மையத்தின் பட்டியலில் இந்தியா முதல் முறையாக இடம்பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ராணுவ தளவாட ஏற்றுமதி என்பது...
இந்தியா

ஷாருக்கான் மும்பை இல்லத்தில் ஆவணங்கள் தயாரித்த என்சிபி அதிகாரிகள்

பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஷாருக்கானின் மும்பை இல்லத்தில் ஆர்யன் கான் வழக்கு தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் நேற்று தயாரித்தனர். கடந்த 2-ம் தேதி மும்பையில் இருந்து கோவா புறப்பட்ட சொகுசு கப்பல் ஒன்றில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் கேளிக்கை விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர்...
இந்தியா

போலீஸ் காவலில் இறந்தவரின் குடும்பத்தை சந்திக்க சென்ற பிரியங்கா; தடுத்து நிறுத்திய உ.பி காவல்துறை

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப் பிரதேசத்தில், போலீஸ் காவலில் இறந்தவரின் உறவினர்களைச் சந்திக்கச் சென்றார். அப்போது, எந்த அரசியல் ஆளுமையும் அங்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று ஆக்ரா மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதால் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ்வேயில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள வத்ரா போலீஸ் காவலில் இறந்த வால்மீகி...
இந்தியா

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நன்னடத்தை விதிகள் திரும்ப பெறப்படுமா?: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை முடிவில் தெரிய வாய்ப்பு

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல்நன்னடத்தை விதிகள் திரும்ப பெறப்படுமா என்ற கேள்விக்கான விடை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் விசாரணை முடிவில் தெரிய வாய்ப்புள்ளது. புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த 2 முறை மாநில தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்தது. வார்டு வரையறை, இடஒதுக்கீடு குளறுபடிகள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக இரு முறையும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. முதல்முறை நிறுத்தி வைக்கப்பட்டபோது, அவசரமாக தேர்தலை நடத்த பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீடு...
இந்தியா

லக்கிம்பூர் கலவர வழக்கை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த 3-ம் தேதி பாஜகசார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. அப்போது, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் அங்கு பேரணி சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற பாஜகவினரின் கார் ஒன்று, விவசாயிகள் மீது மோதியது. இதையடுத்து, அங்கு நடைபெற்ற மோதலில் 4 விவசாயிகள் 3 பாஜக நிர்வாகிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இதனிடையே, மத்திய அமைச்சர்...
இந்தியா

கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு 48 மணிநேர கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

கேரளாவில் மழை சற்றே குறைந்திருந்தாலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கேரளாவில் இதுவரை இந்த கன மழைக்கு 23 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அதில், நிலசரிவில் சிக்கி மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இடுக்கி, கோட்டயம் மாவட்டத்தின் கொக்கயாறு, பூவஞ்சி, மாக்கோச்சி, பிலாபள்ளி, காவாலி, கூட்டிக்கல், பகுதிகளில் நிலசரிவில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். பூவந்தி...
இந்தியா

விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் :நான்கு மாநிலங்களில் போக்குவரத்து பாதிப்பு

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி வன்முறையை கண்டித்து, விவசாயிகள் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் சமீபத்தில் நடந்த வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் பலியாயினர். இதுதொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். இதனால் அஜய் மிஸ்ரா உடனடியாக பதவி...
1 44 45 46 47 48 82
Page 46 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!