இந்தியா

இந்தியா

காஷ்மீரில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாம்பே, கோபால்போரா ஆகிய 2 இடங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து இரு குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாம்பே பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென வீரர்கள் மீது துப்பாக்கி...
இந்தியா

தடுப்பூசி போடாதவங்களுக்கு ரேஷன் கிடையாது.. எப்.ஐ.ஆர். பதிவு.. மத்திய பிரதேச அரசு அதிரடி

மத்திய பிரதேசத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் கிடையாது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தொற்று நோயான கொரோனா வைரஸை கட்டுக்குள் வைப்பதற்கு முக்கிய ஆயுதமாக கோவிட் தடுப்பூசி கருதப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று மத்திய அரசு நோக்கம் கொண்டுள்ளது. இந்த நோக்கத்தை அடைவதற்காக, தடுப்பூசி போட தயங்கும் மக்களை கட்டாயம் தடுப்பூசி போட வைக்க...
இந்தியா

திருப்பதிக்கு பாதை யாத்திரையாக வரவேண்டாம் : தேவஸ்தானம் அறிவிப்பு

கனமழை எச்சரிக்கையால் வருகிற 17,18ம் தேதிகளில் திருப்பதிக்கு பாதையாத்திரையாக வர வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலைக்கு செல்லும் அலிபிரி வழி நடைபாதை மற்றும் சீனிவாசமங்காபுரம் வழியாக செல்லும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையை மூடவும் தேவஸ்தானம் உத்தரவு பிறப்பித்துள்ளது...
இந்தியா

கனடாவிலிருந்து மீட்கப்பட்ட சிலை காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதிஷ்டை

கனடாவில் இருந்து 108 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட அன்னபூரணி சிலை, வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.நம் நாட்டிலிருந்து வட அமெரிக்க நாடான கனடாவுக்கு 108 ஆண்டுகளுக்கு முன் கொண்டு செல்லப்பட்ட அன்னபூரணி சிலை சமீபத்தில் மீட்டு வரப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அந்த சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.மேலும், கோவில் புனரமைப்பு பணியின் போது அகற்றப்பட்ட ஐந்து...
இந்தியா

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயாவுக்கு மாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பதவி வகித்த சஞ்ஜிப் பானர்ஜி, கடந்த ஜன.4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், இவரை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய, உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி அடங்கிய கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்கிடையே, 75 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சஞ்ஜிப் பானர்ஜியை, 3 நீதிபதிகள்...
இந்தியா

29-வது தென் மண்டல முதல்வர்கள் மாநாடு; பாலாற்றில் அணை கட்ட தமிழகம் அனுமதி தர வேண்டும்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தல்

பாலாற்றில் அணை கட்ட தமிழகஅரசு ஒப்புதல் வழங்க வேண்டும்என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தி உள்ளார். திருப்பதியில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் 29-வதுதென் மண்டல முதல்வர்கள்மாநாடு மத்திய உள்துறை அமைச் சர் அமித் ஷா தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தெலங்கானா தலைமைச் செயலாளர் சோமேஷ்...
இந்தியா

டெல்லியில் லாக்டவுன் அறிவிக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்தில் இன்று பதில் மனு

டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு இன்று பதில் மனுத் தாக்கல் செய்ய உள்ளது. தலைநகர் டெல்லியில் நிலவும் காற்று மாசு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வாகன நெரிசல் காரணமாகவும், அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பதாலும் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிலேயே இருந்து வருகிறது. இதற்கிடையில், காற்று மாசை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகையின் போது...
இந்தியா

மெய்நிகர் நாணய பரிவர்த்தனை – பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

கிறிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணய முதலீட்டில் அளவுக்கு மீறிய லாபம் என உறுதியளித்து இளைஞர்களை தவறாக வழிநடத்த நடக்கும் முயற்சி தடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மெய்நிகர் நாணய பரிவர்த்தனை பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்தியாவில் அதற்கு கடந்த ஆண்டில் ரிசர்வ் வங்கி தடை விதித்தது. ஆனால், கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் அந்தத் தடையை விலக்கி தீர்ப்பளித்தது. இதையடுத்து,...
இந்தியா

மணிப்பூர் தாக்குதல் மோடியால் நாட்டை காக்க முடியாது என்பதை காட்டுகிறது – ராகுல் காந்தி!

மணிப்பூர் தாக்குதல் மோடியால் நாட்டை காக்க முடியாது என்பதை காட்டுகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் உள்ள சூராசந்த்பூர் எனும் பகுதியில் நேற்று அசாம் ரைபிள்ஸ் படையினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்...
இந்தியா

டெல்லியில் குடியுரசுதின டிராக்டர் பேரணி: கைதான 83 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

டெல்லியில் கடந்த ஜனவரி 26ம் தேதி நடந்த குடியரசுத் தினத்தில் டிராக்டர் பேரணி சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 83 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் சரண்சித் சிங் சன்னி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டெல்லியின் புறநகர் பகுதிகளில் விவசாயிகள், வேளாண்அமைப்புகள், விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்....
1 39 40 41 42 43 82
Page 41 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!