இந்தியா

இந்தியா

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்.. இன்றும், நாளையும் எதுவும் இயங்காது

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கத்தை,அனுமதிக்கும் வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு இன்று மற்றும் நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச் வெங்கடாச்சலம் பேசுகையில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021 நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது....
இந்தியா

வங்காளதேச விடுதலை பொன்விழாவில் கவுரவ விருந்தினராக ஜனாதிபதிக்கு அழைப்பு

பாகிஸ்தானிடம் இருந்து வங்காளதேசம் விடுதலை அடைந்து 50 ஆண்டுகள் ஆகிறது. வங்காளதேச விடுதலை பொன்விழாவில் கலந்து கொள்ள, வங்காளதேச அதிபர் அப்துல் ஹமீது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்க்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று, 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று ஜனாதிபதி ராம்நாத் வங்காளதேசத்துக்கு சென்றார். தனி ஏர் இந்தியா ஒன் விமானத்தில் டாக்கா சர்வதேச விமான நிலையம் சென்ற ஜனாதிபதிக்கு, 21 குண்டுகள் முழங்க, சிவப்பு...
இந்தியா

பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் வாரணாசியில் பிரதமர் ஆலோசனை

பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் நேற்று ஆலோசனை நடத்தினார். உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் 3 ஆயிரம் சதுர அடியில் இருந்து 5 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ரூ.339 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட இக்கோயிலை பிரதமர் நரேந்திர...
இந்தியா

இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்கும் ஒமிக்ரான் வைரஸ்.! மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி.! பாதிப்பு எண்ணிக்கை உயர்வு.!

வெளிநாடுகளில் இருந்து மகாராஷ்டிரா வந்த மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான் தொற்று போட்ஸ்வானா, ஹாங்காங், இங்கிலாந்து, சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிவேகமாக பரவிவருகிறது. ஒரே வாரத்தில் பெரும்பாலான நாடுகளில் பரவியதால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்தியாவில் நேற்று வரை ஆந்திரா, சண்டிகர், மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 41 பேருக்கு ஒமைக்ரான் தொற்று வைரஸ் உறுதி...
இந்தியா

மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்க டிசம்பர் 17-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 15-வது கூட்டம் டிசம்பர் 17-ம் தேதி அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14-வது கூட்டம் டெல்லியில் கடந்த செப்டம்பர்27-ம் தேதி நடைபெற்றது. அதில் கர்நாடக அரசு மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்படவில்லை. மேலும் இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு...
இந்தியா

கர்நாடக பேரவையில் மதமாற்ற தடை மசோதா: முதல்வர் பொம்மை முடிவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு

கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த முதல்வர் பசவராஜ் முடிவெடுத்துள்ளார். இதற்கு காங்கிரஸ்கட்சியும் கிறிஸ்தவ அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கர்நாடக மாநிலத்தில் இந்துக்களை கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றுவதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. இதையடுத்து கட்டாய மதமாற்றம் குறித்த தகவல்களை சேகரிக்க மாவ‌ட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். மேலும் வட மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை ஆய்வுசெய்து, புதிய சட்டத்தை உருவாக்குமாறு சட்ட...
இந்தியா

டெல்லி அசோகா ஹோட்டலை தனியாருக்கு குத்தகைக்குவிட மத்திய அரசு முடிவு

டெல்லியில் உள்ள அசோகா ஹோட்டலை தனியாருக்கு 60 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியின் மையப்பகுதியில் தூதரக அலுவலகங்கள் அதிகம் உள்ள இடத்தில் அமைந்துள்ளது அசோகா ஹோட்டல். 500க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட இது 1956-ல் கட்டப்பட்டதாகும். இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் (ஐடிடிசி) கட்டுப் பாட்டில் உள்ளது. இந்த ஹோட்ட லில் உள்ள தரை விரிப்புகள் மற்றும் மரச் சாமான்களை புதுப்பிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு...
இந்தியா

இந்தியாவில் நடப்பது இந்துத்துவா வாதிகளின் ராஜ்ஜியம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று பேரணி நடத்தினர். இப்பேரணிக்கு தலைமை வகித்து ராகுல் காந்தி பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், இந்தியாவில் இனி ஏழைகளே வாழ முடியாது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டுகிறது. இதனால்...
இந்தியா

பினாகா ஏவுகணை சோதனை வெற்றி

வெவ்வேறு தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் பினாகா ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது . பினாகா ஏவுகணை அமைப்பின் சோதனை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது . இவை 40 கிலோ மீட்டர் தூரம் முதல் வெவ்வெறு தூரங்களில் உள்ள இலக்குகளை தாக்கும் சக்தி கொண்டவை . மத்திய அரசு நிறுவனமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ( டிஆர்டிஓ ) ஆய்வகங்களான...
இந்தியா

இன்று காலை காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை..!

பாரகாம் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோராவில் உள்ள பராகம் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.  ...
1 33 34 35 36 37 82
Page 35 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!