இந்தியா

இந்தியா

“மீண்டும் இரவு நேர ஊரடங்கு” – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

டெல்டாவைவிட ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று 3 மடங்கு வேகமாக பரவக் கூடியது என மத்திய அரசு தகவல். இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கொரோனா தொற்று பரவல் 10% மேல் இருந்தால், அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். டெல்டாவைவிட ஒமிக்ரான்...
இந்தியா

சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல வசதியாக ஹெலிகாப்டர் சேவை: திருவாங்கூர் தேவசம் வாரியம் திட்டம்

வசதிமிக்க பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஹெலி காப்டரில் வர வசதியாக நிலக்கல் விமானதளத்தை ஹெலிகாப்டர் சேவை வழங்கும் நிறுவனங் களுக்கு குத்தகைக்கு விட திருவாங்கூர் தேவசம் வாரியம் திட்டமிட்டுள்ளது. சபரிமலைக்கு அருகே உள்ள நிலக்கல் பகுதியில் திருவாங்கூர் தேவசம் வாரியம் சார்பில் ஏற்கெனவே விமான தளம் அமைக்கப்பட்டது. கொச்சியில் இருந்து நிலக்கல்லுக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்கும் திட்டம் போதுமான வரவேற்பு இல்லாததால் கைவிடப்பட்டது. இப்போது அந்த விமான தளம்...
இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் இன்று பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம்!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று நடக்க உள்ளது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் கடந்த நவ.29ஆம் தேதி தொடங்கியது. இதற்கு ஒரு நாள் முன்பாகவே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அன்றே பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்பிக்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, இரு அவைகளிலும் பாஜக எம்பிக்கள் தவறாமல் வர வேண்டும் என உத்தரவிட்டார். இதன் பின்னரும் சில...
இந்தியா

ஒமைக்ரான் அச்சம்;குஜராத்தில் இரவுநேர ஊடரங்கு மீண்டும் அமல்: 31ம் தேதிவரை நீட்டிப்பு

குஜராத்தில் கரோனா வைரஸ் பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில் அங்குள்ள 8 முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத், காந்திநகர், சூரத், ராஜ்கோட், வதோததரா, பாவ்நகர், ஜாம்நகர், ஜூனாகார்க் ஆகிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 8 நகரங்களிலும் ஒமைக்ரான் பாதிப்பும், கரோனா பாதிப்பும் மெல்ல அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கையாக இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் இறுதி நாட்களில்...
இந்தியா

பொற்கோயில், கபர்தலா குருத்வாராவில் அடுத்தடுத்த நாளில் 2 பேர் அடித்துக் கொலை: தெய்வ நிந்தனை செய்ததாக குற்றச்சாட்டு; தீவிரமாக விசாரிக்க பஞ்சாப் முதல்வர் உத்தரவு

பஞ்சாப்பில் பொற்கோயில் மற்றும் கபதர்லா குருத்வாராவில் தெய்வ நிந்தனை செய்ததாக அடுத்தடுத்த நாளில் 2 பேர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சென்னி உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப்பில் அமிர்தசரசில் உள்ள பொற்கோயில் சீக்கியர்களின் புனித தலமாகும். இங்கு நேற்று முன்தினம் மாலை 7 மணி அளவில் சீக்கியர்கள் பலர் வழக்கம் போல்...
இந்தியா

மக்களவையில் ‘தேர்தல் சீர்திருத்த மசோதா’ இன்று தாக்கல்!

மக்களவையில் 'தேர்தல் சீர்திருத்த மசோதா' இன்று அறிமுகம் செய்கிறார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ. இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்தது வரும் நிலையில், தேர்தல் ஆணையம் 4 வகையான தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது. அதில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு...
இந்தியா

பாலியல் பலாத்காரத்தின் போது தப்ப முடியாவிட்டால் என்ஜாய் பண்ணுங்க…கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

'பலாத்காரம் செய்யும் போது போராடி தப்பிக்க முடியாவிட்டால், அமைதியாக இருந்து அதை அனுபவிக்க வேண்டும்,' என்று கர்நாடகா காங்கிரஸ் முன்னாள் சபாநாயகரும், எம்எல்ஏ.வுமான ரமேஷ் குமார் பதில் கூறியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடகாவில் சட்டப்பேரவை குளிர்கால தொடர் நடந்து வருகிறது. பெலகாவி சட்டப்பேரவை கட்டிடத்தில் இது நடக்கிறது. இதில், கர்நாடகா பாஜ அரசின் பல்வேறு முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றன. இது பற்றி பேசுவதற்கு...
இந்தியா

மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணம் – முதல்வர் அறிவிப்பு.

உத்தரகாண்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி கூறும்போது, உத்தரகாண்டில் மாணவிகள் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என கூறியுள்ளார். நம்முடைய மாணவிகள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவர்களுடைய கல்வியானது, அவர்களுக்கு எளிய அனுபவம் கிடைத்தது போல் அமைந்திருக்க வேண்டும். அதனாலேயே, அவர்களுக்காக இந்த சேவையை நாங்கள் தொடங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார்....
இந்தியா

மகாராஷ்ராவில் மாட்டு வண்டி பந்தயத்துக்கு அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்றம்

மகாராஷ்ராவில் மீண்டும் மாட்டு வண்டிபந்தயம் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடத்த கடந்த 2017ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தடையை நீக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா அரசு கடந்த 2018ம் ஆண்டு இடைக்கால மனுவை தாக்கல் செய்தது. நீதிபதி ஏ.எம்....
இந்தியா

ஆண், பெண் இருபாலின மாணவர்களுக்கும் ஒரே சீருடை அறிமுகம்.

கேரளாவில் பள்ளி மாணவர்களிடம் ஏற்படும் பாலின பாகுபாட்டை அகற்றும் வகையில் ஆண், பெண் இருபாலின மாணவர்களுக்கும் ஒரே சீருடை வழங்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பாலின சமத்துவம் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக கேரளாவில் பள்ளி மாணவர்களிடையே பாலின சமத்துவத்தை நிலைநிறுத்த பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி சீருடையில் பாலின பாகுபாட்டை அகற்றும் விதமாக மாணவர்களுக்கு பாலின பாகுபாடற்ற சீருடையை அறிமுகப்படுத்தி உள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தின்...
1 32 33 34 35 36 82
Page 34 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!