இந்தியா

இந்தியா

39 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து அனைத்து மாநிலத்தவரும் இனி காஷ்மீரில் நிலம் வாங்கலாம்

ஜம்மு காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-ம் பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ல் திரும்பப் பெற்றது. இதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வீடு மற்றும் நிலம் வாங்க வழி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய வீடு மற்றும் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் சார்பில் காஷ்மீர் ரியல் எஸ்டேட் மாநாடு 2021 நடைபெறுகிறது. இதில்...
இந்தியா

‘நிதி ஆயோக்’ சுகாதாரத்தில் சிறந்த மாநிலங்கள் பட்டியல்: கேரளம், தமிழ்நாடு முதல் 2 இடம்; உத்தர பிரதேசம் கடைசி இடம்

சிறந்த சுகாதார வசதியுடைய மாநிலங்கள் பட்டியலில் யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ள உத்தர பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது. 2019-2020 ஆண்டில் ஒட்டுமொத்த சுகாதார செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களை தரவரிசைப்படுத்தி, இந்திய அரசின் 'நிதி ஆயோக்' அமைப்பு பட்டியல் தயாரித்துள்ளது. சுகாதார செயல்பாட்டின் முக்கிய அம்சங்கள் அடங்கிய 24 அளவுகோல்கள் அடிப்படையில் 4-வது ஆண்டாக இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்தும், உலக வங்கியின் தொழில்நுட்ப உதவியுடனும்...
இந்தியா

மலிவு விலை பொருள் குவிப்பு தடுப்பு சட்டத்தின்கீழ் 5 சீன பொருட்களுக்கு 5 ஆண்டு தடை: மத்திய அரசு அறிவிப்பு

உள்நாட்டு தொழில்களைக் காக்கும் வகையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 பொருட்களுக்கு 5 ஆண்டு இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. அலுமினியம் மற்றும் ரசாயன பொருட்கள் இதில் அடங்கும். உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர்களைக் காக்க மலிவுவிலை பொருட்கள் குவிப்பு தடுப்பு (ஆன்டி டம்பிங்) சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரி மற்றும் சுங்கத் துறை வாரியம் (சிபிஐசி) தெரிவித்துள்ளது. உருளை வடிவிலான அலுமினியம்,...
இந்தியா

காங்., நிகழ்ச்சிக்கு உ.பி.,யில் தடை

லக்னோ-உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநில சட்ட சபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. பெண்களை கவரும் நோக்கில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, 'நான் பெண்; போராடுவேன்' என்ற பிரசாரத்தை துவக்கியுள்ளார்.இதையொட்டி லக்னோ மற்றும் ஜான்சியில் பெண்கள் பங்கேற்கும் மாரத்தான் ஓட்டத்துக்கு காங்கிரஸ் சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா பரவலை காரணம் காட்டி லக்னோவில் இந்த போட்டியை நடத்த நிர்வாகம் அனுமதி...
இந்தியா

32 ஆண்டு சேவைக்கு பின் ஐ.என்.எஸ்., குக்ரி கப்பலுக்கு ஓய்வு

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்., குக்ரி போர்க்கப்பலுக்கு 32 ஆண்டு சேவைக்கு பின் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.'மஸகான் டோக் ஷிப் பில்டர்ஸ்' நிறுவனம் தயாரித்த ஐ.என்.எஸ். குக்ரி போர்க்கப்பல் இந்தியக் கடற்படையில் 1989 ஆக., 23ல் சேர்க்கப்பட்டது.இந்தக் கப்பல் இதுவரை 6 லட்சத்து 44 ஆயிரத்து 897 கடல் மைல் பயணம் செய்துள்ளது. இந்தக் கப்பலில் 28 தளபதிகள் பணிபுரிந்துள்ளனர். இதன் 32 ஆண்டுகால சேவைக்கு பின் ஓய்வு கொடுக்கும் நிகழ்ச்சி ஆந்திரமாநிலம்...
இந்தியா

அழைப்பு, இணைய பயன்பாடு தரவுகள் 2 ஆண்டுகளுக்கு சேமிக்க வேண்டும்: தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

தொலைபேசி அழைப்புகள், இணையதள பயன்பாடு ஆகியவற்றின் தரவுகளை குறைந்தது 2 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்கவேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சந்தாதாரர்களின் நலன், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களுடைய தொலைபேசி அழைப்புகள், இணையதள பயன்பாடு ஆகியவற்றின் தரவுகளை முன்பு ஓராண்டு வரை சேமித்து வைத்திருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. இதை மாற்றி தற்போது குறைந்தது 2...
இந்தியா

உ.பி. தேர்தலை ஒத்திவையுங்கள்; அரசியல் பேரணிகளுக்கு தடைவிதியுங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்

தேர்தல் நடக்கும் மாநிலங்களில் அரசியல் கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள், பேரணிகளுக்கு தடை விதியுங்கள் என்று பிரதமர் மோடிக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஒரு வழக்கில் பிணை வழங்கக்கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சேகர் குமார் யாதவ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தெரிவித்த கருத்தில் கூறியதாவது ' ஒமைக்ரான் பரவலால் இந்தியாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக...
இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் இரவு 11 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு: முதல்வர் உத்தரவு

மத்தியப் பிரதேசத்தில் இரவு 11 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் வைரஸ் பரவல் நாட்டில் அதிகரித்துவரும் சூழலில் ம.பி. முதல்வர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை. இருப்பினும் சவுகான் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார். முன்னதாக, மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில...
இந்தியா

மேகேதாட்டுவில் அணை கட்ட டிச.27-ல் அனுமதி கிடைக்கும்: கர்நாடக முதல்வர் பசவராஜ் தகவல்

பெலகாவியில் நடை பெற்று வரும் கர்நாடக சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடரில் நேற்றுஹொசக்கோட்டை சுயேச்சை எம்எல்ஏ ஷ‌ரத் பச்சே கவுடா, 'மேகேதாட்டு திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்?'' என‌ கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலளித்து பேசுகையில், 'காவிரி ஆற்றின் குறுக்கேமேகேதாட்டுவில் 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. மத்திய நீர்வள ஆணையம் இதற்கான முதற்கட்ட அனு மதியை வழங்கியுள்ளது. மத்திய சுற்றுச்...
இந்தியா

ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை: இரவு ஊரடங்கு குறித்து பரிசீலிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

அதிகரித்து வரும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இதனிடையே, ஒமைக்ரான் பரவலை தடுக்க இரவுநேர ஊரடங்கு குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 26-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய...
1 31 32 33 34 35 82
Page 33 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!