இந்தியா

இந்தியா

பாஜகவின் இந்த மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்: லாலு பிரசாத் யாதவின் 5 ஆண்டு சிறை தண்டனை குறித்து தேஜஸ்வி யாதவ் பேட்டி

பீகாரில் கால்நடை தீவனம் ஊழல் தொடர்பான 5வது வழக்கில் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ்-க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லாலு பிரசாத் கடந்த 1990 முதல் 1997ம் ஆண்டு வரை இரண்டு முறை முதலமைச்சராக இருந்த போது கால்நடை தீவனம் வாங்கியதில் 950 கோடி ரூபாய் ஊழல் புகார் எழுந்தது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான 4...
இந்தியா

ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீனுக்கு எதிர்ப்பு: பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மனு

லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த ஆண்டு அக்டோபர் 3 தேதி நடந்த பேரணியில் காரை செலுத்தி 4 விவசாயிகளை படுகொலை செய்த ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத்...
இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்- ராணுவ வீரர்கள் வீர மரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் ஷோபியன் பகுதியில் உள்ள செர்மார்க், ஜைனாபோரா பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சோபியான் மாவட்டத்தில் உள்ள செர்மார்க்...
இந்தியா

உபி.,யில் 3ம் கட்ட தேர்தல், பஞ்சாப் சட்டசபை தேர்தல் ஓட்டுப் பதிவு துவங்கியது

உ.பி.,யில் மூன்றாம் கட்ட சட்டசபைத் தேர்தல், பஞ்சாப் சட்டசபை தேர்தல்இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. உ.பி., யில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தில் மொத்தம் 403 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் முதல்கட்ட தேர்தல் கடந்த 10-ம்தேதியும் இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 14-ம் தேதியும் நடைபெற்றது. முதல்கட்ட தேர்தலில் 60.17 சதவீத வாக்குகளும் இரண்டாம் கட்ட தேர்தலில் 61 சதவீத வாக்குகளும் பதிவாகின.இந்நிலையில் 3-ம் கட்ட...
இந்தியா

2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை: சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு – முழு விவரம்

கடந்த 2008-ல் அகமதாபாத் நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 11 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. நகரின் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 21 குண்டுகள் வெடித்தன....
இந்தியா

உலகின் சிறந்த 30 சுற்றுலா தலங்களில் கேரள கிராமம்: அருந்ததி ராயின் புக்கர் பரிசு வென்ற நாவலால் கிடைத்த அங்கீகாரம்

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த அய்மனம் கிராமம் உலகின் தலைசிறந்த 30 சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அமெரிக்கா மற்றும் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு வெளியாகும் பிரபல பயண இதழான காண்டே நாஸ்ட் இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் கடந்த 1997-ம் ஆண்டு 'த காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்' என்னும் நாவலை எழுதி வெளியிட்டிருந்தார். இது அருந்ததி ராய்க்கு புக்கர் பரிசை பெற்றுத் தந்தது....
இந்தியா

தில்லியின் காற்றின் தரம் தொடர்ந்து ‘மோசம்’ பிரிவில் உள்ளது!

தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் 'மோசம்' பிரிவில் நீடித்து வருகிறது. இது குறித்து தில்லி காற்றின் தரத்தை கணித்து வரும் சஃபா் தெரிவித்துள்ளதாவது: வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, காற்றின் தரம் 'மோசம்' பிரிவில் உள்ளது. 'மோசம்' பிரிவில் நீடிக்கும் காற்றின் தரக் குறியீடு 232 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. தில்லி பல்கலைக்கழகம், லோதி சாலை, நொய்டா, மதுரா சாலை மற்றும் இந்திரா காந்தி சர்வதேச...
இந்தியா

உக்ரைன் விவகாரம்: “பேச்சுவார்த்தை மட்டுமே இதற்குத் தீர்வு!” -ஐ.நா-வில் இந்தியா கருத்து

ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் பதற்றம், உலக நாடுகள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அவசர கூட்டம் ஒன்றை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நடத்தியுள்ளது. இதில் பேசிய இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி, ``அதிகரித்து வரும் ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றத்தைத் தணிக்க ஆக்கப்பூர்வமான மற்றும் அறிவார்ந்த நடவடிக்கைகளைத் தான் நாம் மேற்கொள்ள வேண்டும். அது தான் காலத்தின் தேவையும் கூட. உலக...
இந்தியா

தேசிய அளவில் பு।திய கூட்டணி உருவாக்க சந்திரசேகர ராவ் தீவிரம்

பா.ஜ.,வுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்கும் முயற்சியின் அடுத்த கட்டமாக, மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மும்பையில் வரும் ௨௦ம் தேதி சந்திக்கிறார்.லோக்சபாவுக்கு, 2024ல் தேர்தல் நடக்க உள்ளது. முயற்சிபா.ஜ.,வுக்கு எதிராக காங்கிரஸ், இடதுசாரிகள் அல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முயற்சித்து வருகிறார். உத்தர பிரதேசம் உள்ளிட்ட...
இந்தியா

இனி கட்டுப்பாடுகள் வேண்டாம்.. மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருவதை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது தொற்றின் பாதிப்பு, பாதிப்பு விகிதம், மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களின் சேர்க்கை என எல்லாமே குறைந்துகொண்டே வருகிறது. அதன் காரணமாக தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா தொற்று குறைந்து...
1 22 23 24 25 26 82
Page 24 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!