இந்தியா

இந்தியா

டீசல் தட்டுப்பாடு: கேரளாவில் 50 சதவீத அரசு பஸ் சேவை நிறுத்தம் – பொதுமக்கள் கடும் அவதி

கேரள அரசு போக்கு வரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்துக் கழகத்தின் சராசரி தினசரி வருவாய் ரூ.6.5 கோடி. இதில் டீசல் செலவு ரூ.3.5 கோடி. இதனை எண்ணெய் நிறுவனங்களுக்கு போக்குவரத்து கழகம் வழங்கினாலும் கட்டண பாக்கி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் கேரள அரசுபோக்குவரத்துக் கழகம், எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டண பாக்கி ரூ.135...
இந்தியா

பாதை மாறியது ‘எஸ்.எஸ்.எல்.வி., – டி1’ ராக்கெட் விண்ணில் ஏவிய செயற்கைக்கோள்கள்

'எஸ்.எஸ்.எல்.வி., - டி 1 ராக்கெட், இரு செயற்கைக் கோள்களையும், 356 கி.மீ., புவி வட்ட சுற்றுப்பாதைக்கு பதில், நீள்வட்ட பாதையில் நிலைநிறுத்தியதால், அந்த செயற்கைக் கோள்களை இனி பயன்படுத்த முடியாது,'' என, 'இஸ்ரோ' தலைவர் சோம்நாத் தெரிவித்தார். 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள்களை தயாரித்து, பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன் விண்ணில் செலுத்துகிறது.500...
இந்தியா

ரெப்போ விகிதம் அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 5.4 சதவீதமாக உயர்வு என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 0.5% அதிகரிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். அதன்படி, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதம் உயர்வு, உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார். ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி...
இந்தியா

நேரு,வாஜ்பாய் முட்டாள்தனத்தால் திபெத், தைவானை இழந்தோம்: சுப்பிரமணியன் சுவாமி விளாசல்

பிரதமர் மோடி உணர்வற்று இருக்கிறார், ஜவஹர்லால் நேரு, அடல் பிஹாரி வாஜ்பாயின் முட்டாள்தனத்தால்தான் திபெத், தைவான் சீனாவின் ஒருபகுதி என்று இந்தியர்கள் ஒப்புக்கொண்டோம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி காட்டமாகத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி உணர்வற்று இருக்கிறார், ஜவஹர்லால் நேரு, அடல் பிஹாரி வாஜ்பாயின் முட்டாள்தனத்தால்தான் திபெத், தைவான் சீனாவின் ஒருபகுதி என்று இந்தியர்கள் ஒப்புக்கொண்டோம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி காட்டமாகத் தெரிவித்துள்ளார்....
இந்தியா

விண்வெளி திட்டங்களுக்கு தாமதமில்லாமல் அனுமதி – மத்திய இணை அமைச்சர் ஜிதேந்தரா சிங் தகவல்

விண்வெளி தொடர்பான திட்டங்களுக்கான அனுமதிக்கு தாமதம் இல்லை என மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்தரா சிங் தகவல் அளித்துள்ளார். இதை அவர், திமுக எம்.பி. டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கான பதிலில் தெரிவித்தார்.. இது குறித்து பிரதமர் அலுவலகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் அளித்த பதிலில் கூறியதாவது: உலக விண்வெளிப் பொருளாதாரத்தின்( குளோபல் ஸ்பேஸ் எகானமியின்) சரியான அளவை மதிப்பிடுவது ஒரு சிக்கலானதும் விவாதத்திற்குரியதுமான விஷயம்...
இந்தியா

பண மோசடி வழக்கு: நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல் வைத்தது அமலாக்கத்துறை…!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குநா்களாக உள்ள 'யங் இந்தியா' நிறுவனம், 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த...
இந்தியா

கோவிட் தடுப்பூசி 3வது தவணை செலுத்தும் பணிகள் முடிந்ததும் சி.ஏ.ஏ அமல்படுத்தப்படும் – அமித்ஷா

ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டம் கோவிட் தடுப்பூசி இயக்கம் முடிந்ததும் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியை, மேற்கு வங்கத்தில் பாஜகவின் செயல்பாடுகள் மற்றும் அமைப்புப் பிரச்னைகள் தொடர்பான விஷயங்களை...
இந்தியா

அக்.,31க்குள் கல்லூரியில் இருந்து மாணவர்கள் வெளியேறினால் முழுக் கட்டணம்: யுஜிசி

முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் கல்லூரிகளில் இருந்து அக்டோபர் 31ம் தேதிக்குள் வெளியேறினால் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான சி.யு.இ.டி., தேர்வு ஆகஸ்ட் 20ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தத் தேர்வின் முடிவுகள் வெளியாக 15 நாட்கள் ஆகும். இதுபோல் நீட் தேர்வு முடிவுகளும் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள்...
இந்தியா

சிவசேனா எங்கள் பின்னால் உறுதியாக உள்ளது- சஞ்சய் ராவத் தம்பி கூறுகிறார்

குடிசை சீரமைப்பு திட்ட மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் சஞ்சய் ராவத்தை கைது செய்தனர். மேலும் அவர்கள் நடத்திய சோதனையில் சஞ்சய் ராவத் வீட்டில் இருந்து ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் கைது நடவடிக்கை தொடர்பாக சஞ்சய் ராவத்தின் தம்பியும், விக்ரோலி தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ.வுமான சுனில் ராவத் கூறியதாவது:-...
இந்தியா

மக்களவையில் கொந்தளித்த நிர்மலா – பாதியிலேயே வெளிநடப்பு செய்த திமுக கூட்டணி எம்பிக்கள்

பொதுமக்கள் பயன்படுத்தும் பால், தயிர், மோர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி தொடர்பாக மக்களவையில் திங்கட்கிழமை திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விகளுக்கு தமிழில் பதிலளித்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிர்ணயித்த வரியை விட அதிக வரிச்சுமையை மக்கள் மீது திணித்தது திமுக அரசுதான் என்று குற்றம்சாட்டினார். அவரது பேச்சுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி எம்பிக்கள் ஆட்சேபம் தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்....
1 8 9 10 11 12 82
Page 10 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!