‘இலங்கை ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை மன்னிக்க தயார்’ – மகனின் குடும்பத்தையே இழந்த தந்தை
ஈஸ்டர் தாக்குதலின் 2ம் வருட பூர்த்தியை முன்னிட்டு, தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து, இலங்கை முழுவதும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, முதலாவது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட கொழும்பு - கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, விசேட...