இலக்கியம்

இலக்கியம்

கவிதை

யாருக்கும் தெரியாமல் அமர்ந்துள்ளது !

அடர்ந்து கிளைபரப்பியபடி குளக்கரை ஆலமரம் யாரோ கட்டிய ஊஞ்சல் .. வந்தவழியே செல்லும்போதெல்லாம் அமர்ந்து ஆடிவிட்டுச் செல்கிறேன் ! கால்களை உந்தி உந்தி மேலெழ விண்வெளிக்குள் பிரவேசித்த இன்ப வெள்ளத்தில் பள்ளிக்கூடச் சிறுமிகள் ! இனம்புரியா மனவமைதியில் இந்த ஊஞ்சல் பலருக்கு இன்ப விருந்தளிக்கிறது ! சுயநலத்தைக் கூறுபோட்டு காற்றுவெளியில் கரைத்தபடி ஆடும் ஊஞ்சல் பலரோடு கை குலுங்குகிறது ! கிராமியப் பாடல்களை முணுமுணுக்க வைத்து காதலர்களை இணைத்தப் பாலமாக...
கவிதை

மழையோ மழை

மழையே மழையே_ வா மாமழையே ஒடி வா அனலாய் பறக்கும் வெயிலினை அமைதியாய் வா மழையே மண்ணில் இறங்கி வா- மழையே மெளனமாய் அலையாய் -ஒடி வா ஏரி குளங்கள் வழியும் படி ஏணி படி ஏறி வா சின்ன சின்ன தூறல்கள் சிறு குழந்தைகள் நெஞ்சில் குதூகலம் மழைக்காலம் மரங்கள் தினம் குளிக்கும் சூரியனை எழுப்புகின்ற சூரியன் சுறுசுறுப்பில் வீரியன் உழவன் வாழ்வு பொங்கட்டும் வறுமை மறைந்திடமே வயில்...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : உலகம் பலவிதம்

நெல்லை கவி க.மோகனசுந்தரம் இந்த உலகம் என்ன நினைக்கும் என்று நினைக்காதீர்கள். அதற்கு வேறு வேலை இருக்கிறது.  இந்த உலகத்தை நம்பாதீர்கள். ஏன் சொல்கிறேன் என்றால்...  உங்களை தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடும் உலகம் தான் உங்களை காலுக்கு கீழே போட்டு நசுக்கவும் தயங்காது. நீங்கள் சிரித்தால் அதுவும் சிரிக்கும். நீங்கள் அழுதால் அப்போதும் அது சிரிக்கும். உங்கள் ஏற்றத்தில் உங்களை புகழும்... இறக்கத்தில் இகழும். அவனுக்குத் தேவை தான்...
கவிதை

தேநீர் பசி

காலை நேரம் இனிய காற்று கனிவாய் பருகும்தேநீர் இனியது அறிவு,ஆற்றல்,கல்வி, , இம்மூன்றும் வளர்ந்திடும் இனிய தேநீரா பருகையிலே உலகை சுமக்கும் சக்தி உனக்குள்ளே இருக்கு இனிய பசியை தீர்ந்திடுமே மனிதனுக்கு பல பசிகள் மானிடம் வெல்லும் தேனீர் பசியில் சாதனை புரிந்திட சரித்திரம் படைத்திட இடைவெளி நேரம் டீ பேரக் அப் காலை மாலை இரண்டு வேளை சுறுப்பாய் சுறுப்பாய் மாற்றும் கவிஞர்களின் சுவையான உணவு தேநீரே அறிஞர்கள்...
கவிதை

தமிழர்.. என்றே!

எங்கள் நாட்டில் பெருமைகளாய் இருக்கும் நாட்கள் விடியல்களாய் பிறக்கும் நாளெல்லாம் கோள் பெயராய் குறிக்கும் வழக்கில் தமிழ் பெயராய்.. இருக்கும் நாட்கள் போகின்றனவே இதற்கும் என்னவோ உரிமைகளோ? மா திங்கள் தோறும் வழிபாடாய் மலர்ந்த காலங்கள் ஏன் போகின்றனவாம்? ஆண்டுகள் ஆண்டுகள் பலப் பலவாய் அதுவும் தாண்டி யுகம் யுகமாய்.. கடந்து மண்ணில் கடல் நிலமாய் கரையேறிய எங்கள் குலம்அறிவாம்! இன்பத் தமிழ்நிலம் இடையூரால் இழந்தது தானே வரலாறாம்.. அறிய...
கவிதை

வாரம் ஒரு கவிதை : காகிதப்பூக்கள்

கவிதை  : 1 அசலைவிட எப்போதும் தூக்கலாகத்திமிறுகின்றன இந்தப்போலிகள் வெளுத்ததெல்லாம் பாலாக இந்த கள்ளிப்பால்... தலையில் பூச்சூடி வந்தாலும் காட்டிக்கொடுத்து விடுகிறது காய்வுகளின் வாசனை .. அடிக்கடி மென்மைகளைச் சீண்டுவதும் பொய்மைகளைத் தூண்டுவதும் உண்டுதான்... ஆனாலும் உண்மையின் அடர்த்திகள் பக்குவம் பெற்றவை ... எந்த மழை நீரிலும் அவை கரைந்து போவதில்லை... எதனைக்கொண்டும் அந்த உண்மையை மாற்ற முடிவதில்லை .. அம்புகளைக்கொண்டும் வம்புகளைக்கொண்டும் தோலுரிக்க முடிவதில்லை... அவையவை இயல்புகளின் இருப்புகளிலேயே...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : கோபத்தை கோபித்துக் கொள்ளுங்கள்

நெல்லை கவி.க.மோகனசுந்தரம் இந்த உலகத்தில் நமது மிக முக்கிய சத்ரு நாம் கொள்ளும் கோபம். கோபம் என்பது நெருப்பு போல தன்னோடு சேர்ந்தவர்களையும் அது எரித்து விடும். கோபம் எவ்வாறெல்லாம் வருகிறது தெரியுமா? பதட்டத்தில் வரும். நமது இயலாமையில் வரும். நமது ஏக்கத்தில் வரும். நாம் கொள்கின்ற பொறாமையில் வரும். நாம் அடைகின்ற தோல்வியில் வரும். எந்த வழியே வந்தாலும் அந்தக் கோபத்தை அணை போட்டுத் தடுத்துக் கொள்ள கற்றுக்...
சிறுகதை

தெய்வச் செயல்…!

வாராவாரம் வியாழக்கிழமை மயிலாப்பூரில் இருக்கும் சாய்பாபா கோவிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் குமாரும் தினேஷும். எந்த வேலை இருக்கிறதோ இல்லையோ வியாழக்கிழமை என்று வந்துவிட்டால் காலையில் விரதம் இருந்து சாய்பாபா கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள் இருவரும். அத்தனை பக்தி. வழக்கம் போல அந்த வாரமும் தி.நகரிலிருந்து மயிலாப்பூருக்கு செல்வதற்கு ஷேர் ஆட்டோ விற்காக காத்துக் கொண்டிருந்தார்கள். ஷேர் ஆட்டோ வருவதற்கு கொஞ்சம் தாமதமானது...
கவிதை

அழகு என்பது…

அழகு என்பது நான் பேசுவது எல்லாம் அழகு தான் நான் நினைக்கின்ற வார்த்தைகள் அழகு தான் பூவாய் மலர்ந்தாய் புன்னகை அழகு தான் காதலிக்கு காதலன் அழகு கணவருக்கு மனைவி அழகு இயற்கைக்கு மழை அழகு இனிய சொற்களுக்கு கவிதை அழகு தாய் தந்தையை வணங்கிடு குடும்பத்தை நடத்திடு அதுவும் அழகு தான் பாடம் எழுதுவது கவிஞனுக்கு அழகு பாடம் படிப்பது மாணவனுக்கு அழகு தம்பதியர்களுக்கு சுற்றுலா செல்வது அழகு...
கவிதை

எங்கள் இந்தியா

எங்கள் இந்தியா நுறுகோடி மக்கள்தொகையை தாண்டினாலும் ! உயிரை சுருட்டும் வறுமையில் வாடினாலும் ! பிளவுகள் பல எங்களிடம் தோன்றினாலும் ! இறுதியில் மரணத்தையே நாடினாலும் ! எங்களுக்குள் இந்தியன் என்ற நாட்டுப்பற்றும் தேசப்பற்றும் என்றென்றும் மாறாது அழியாது ஏனெனில் இவை எங்களின் உணர்ச்சிவசமல்ல உயிர்வசம் ! முனைவர் பாலசந்தர், மண்ணச்சநல்லூர்...
1 4 5 6 7 8 51
Page 6 of 51

Right Click & View Source is disabled.

error: Content is protected !!