முதன் முதலாக இன்று தான் நான் காலேஜூக்கு செல்ல ஆயத்தமாக இருக்கிறேன். மஞ்சள் கலரில் டாப் , ஜீன்ஸ் உடுத்தியிருந்தேன். தூக்கி வாரியிருந்த போனி டெயில் என்னை மேலும் அழகாக காண்பித்தது. அம்மாவிற்கு வீட்டு வேலைகள் இருந்ததால், அப்பா என்னுடன் காலேஜ் வர ஆயத்தமானார்.
சித்திரை வீதியின் தேர் நட்ட நடுவில் ஷெட்டுக்குள் இருந்தது. அதற்குள் முன்பெல்லாம் பன்றிகள் உள்ளே போய் வரும். இப்போது அவைகள் கண்ணிலேயே படுவதில்லை. தேரோட்டத்தின் முன் தகரம் விலக்கி தேரை தூசு தட்டுவார்கள். பி.எச்.ஈ.எல் அமைத்துக் கொடுத்த கிண்ணென்று இருக்கும் சக்கரங்கள்.
அன்று ஞாயிறு ஆனதால் அலுவலக அழுத்தங்கள் ஏதுமின்றி, ஞாயிறு எழுந்தும் நாங்கள் எழுந்திருக்கவில்லை. அப்பொழுதெல்லாம் நொடிக்கு நூறுதரம் 'ஃபிளாஷ் நியூஸ்' என கலங்கடிக்கும் செய்திச் சேனல்கள் தமிழில் புற்றீசல்கள் போல முளைத்திருக்கவில்லை.
"தற்கொலை"- மனம் சுமக்கும் ரணங்கள்.. வாழ்க்கையில் சிக்கல்களும், இடர்களும் பொங்கி பிராவகமெடுக்கும் கடினமான காலகட்டங்களில், மனித மனம் பிரச்சனைகளை எதிர்த்து போராடுவதிலிருந்து விலகி தப்பித்துஓடி 'தற்கொலை' எனும் தவறான பாதையில் புதிரான பயணத்தை துவங்கிவிடுவது மனித வாழ்வின் வரமல்ல சாபம். அரிதாய் கிடைத்த மானிட வாழ்க்கையை அவசரப்பட்டு அரைகுறையாய் முடித்துக் கொள்வது என்பதெல்லாம் ஆறாவது அறிவுக்கு அவமானம். உண்மையில் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க விரும்பும் மனித மனம், தற்காப்பு கருவியாய்...
பால்குடி மறந்த பிள்ளைப் பிராயத்தில் துவங்கி, பள்ளிப் பருவம் முடிகிற வரையில் அனைவருக்கும் ரோல் மாடல் என்றால் அது அவரவர் அப்பாவாகத்தான் இருப்பார்கள். நடை, உடை, பாவனைகள் துவங்கி, உணவுப் பழக்கம் வரை அப்பாவினால் அறிமுகப்படுத்துவது சட்டென்று ஒட்டிக் கொள்ளும். ரசனைகளும் அப்படித்தான்.
“ நீங்க வெளியில் போய் ஒரு வாரமாகுது…என்னத்த இருக்கும் வீட்ல…? கொஞ்சம் அரிசியும் ஒரு காலிஃப்ளவரும் இருக்கு…நீங்க பக்கோடா போடுன்னு வாங்கிட்டு வந்தீங்க..”