இலக்கியம்

இலக்கியம்

கட்டுரை

‘பெண் பெயரில் அறிமுகம் ஆகும் எல்லா கலைஞர்களுக்கும் வரக்கூடிய பெயர் குழப்பம் தான் எனக்கும் வந்தது’ பேனாக்கள் பேரவை நடத்திய மாதாந்திர சந்திப்பில் நாடக எழுத்தாளர் நடிகர் திரு கோவை அனுராதா கலகலப்பு.

மதிப்பிற்குரிய திரு மோகன் தாஸ் அவர்களின் முயற்சியால் பேனாக்களின் சந்திப்பு என்ற கூரையின் கீழே கலை, இலக்கிய பிரபலங்களைச் சந்தித்துகலந்துரையாடும் நிகழ்ச்சி சமீப காலங்களில் நடைபெற்று வருகிறது. அந்த பேனாக்களின் சந்திப்பு எனும் கூரை பேனாக்கள் பேரவை எனும் கூடாரமாக மாறி நேற்று மடிப்பாக்கத்தில் பன்முக திறமையாளர் கலைமாமணி கோவை அனுராதா அவர்களுடன் ஆன சந்திப்பு சிறப்பாக நிகழ்ந்தது. கோவை அனுராதா அவர்கள் திண்ணை நாடகத்தில் தொடங்கி தமிழகத்தில் பல...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : நிதானமே பிராதனம்

நெல்லை கவி க.மோகனசுந்தரம் தானத்தில் சிறந்தது நிதானம் என்பார்கள். பொறுத்தார் பூமி ஆள்வார் என்றும் கூறுவார்கள். நிதானம் பல இன்னல்களுக்கு ஒரு தீர்வு. சரியான முற்றுப்புள்ளி. சொல்லும் பதில்களில் நிதானம் இருந்தால் வீண் வாக்குவாதத்திற்கு இடமில்லை. மேற்கொள்ளும் வாகனப் பயணங்களில் நிதானம் இருந்தால் விபத்தும், ஆபத்தும் என்றும் இல்லை. செய்யும் செயல்களில் நிதானம் இருந்தால் தோல்விகளுக்கு இடமே இல்லை. வெற்றி பெறும் போது நிதானம் இருந்தால் அது நீடித்து நிலைத்து...
சிறுகதை

முதுமையிலும் நேசம் வரும்…

ஞானாம்பாள் வயது எழுபது இருக்கும்.  முகத்திற்கு மஞ்சள் பூசி, வட்ட பெரிய பொட்டியிட்டு, நரைத்த முடியினை கொண்டையிட்டு, சிறு பூ முடிந்து, நூல் புடவை கட்டி எளிமையான தோற்றமுஉடையவர். "மதியம் சாப்பாடு சமைத்து வை டவுனுக்கு போயிட்டு வந்துடுறேன்னு" சொல்லி விட்டுப் போன கணவர் இன்னும் வீடு திரும்பவில்லை என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில்... டிங்... டாங்... அழைப்பு மணி ஓசை ஒலித்தது. "மணி 3.30 ஏன் இவ்வளவு நேரம்" என்று கேட்டுக்...
கவிதை

மழை துளியின் மடல்!

கடிகார முட்களுக்கு வாழ்க்கைப்பட்ட இயந்திரங்களே என்றாவது கேட்டது உண்டா ? எங்களின் வார்த்தைகளை ஓட்டுவீடுகளில் ஒலித்திடும் எங்களின் ஷேக்ஸ்பியரின் காவியங்களையும் கூரைவீட்டுகளில் நாங்கள் இசைக்கும் தெம்மாங்கு பாடல்களையும் நின்று கவனிக்க நேரம் ஏது உங்களுக்கு! எம்மைக்கண்டதும் காவலரை கண்ட கள்வராய் பதுங்கி ஓடும் உங்களுக்கு கால்வாய்களில் நாங்கள் நடத்தும் கலை நிகழ்ச்சி புரிவது கடினமே சமையலறையில் கொதிக்கும் சாம்பார் வாசத்தைக் கூட நுகராத உங்களின் நாசிகளுக்கு நாங்கள் ஈன்றெடுக்கும் மண்வாசம்...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : மௌனத்தின் ஓசை

நெல்லை கவி க.மோகனசுந்தரம் மௌனம் அதிக ஓசை கொண்ட ஒரு மொழி. அது ஒரு தற்காப்பு ஆயுதம். அது ஒரு புரியாத மொழி. ஆனால் அதன் அர்த்தங்கள் ஆயிரமாயிரம். மௌனம் நமக்கு மிகச் சிறந்த காவலன். மௌனம் நமது மிகப்பெரிய சக்தி. அது என்னவென்று பிறருக்கு புரியாத வரையில் நமக்கு அது பலம். சில நேரங்களில் மௌனம் கோபத்தை உணர்த்தும். சில இடங்களில் அது வலியைக் குறிக்கும். பலரால் அது...
கட்டுரை

காதுல பூ – நாடகமும் நானும்

மழைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருகிறது சென்னை... இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சென்னை வெள்ளக்காடாகலாம். பல மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உலாவர ஆரம்பிக்கலாம். செய்தி தொலைக்காட்சிகள் போர்க்காஸ்ட்டிங் செய்ய தொடங்கிவிட்டிருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை சோம்பலை புறந்தள்ளி விட்டு கிளம்பலாம் என்று ஆயத்தமாகி விட்டேன். 'நாடகம் பார்க்க வாங்களேன் ...நீங்க என்னோட கெஸ்ட்...' என்று அன்புடன் அழைத்தார் அந்த பிரபலம். சமீபத்தில் தான் எனக்கு அவருடன்...
கவிதை

ரத்தன் டாடா

உலகக் கோடீஸ்வரர்கள் சிலர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களை விட இவர் தர்மம் செய்த சொத்துக்களின் மதிப்பு அதிகம்... உலக பணக்காரர்கள் பட்டியலில் இவரைச் சேர்க்க மறந்து ஈனத்தனம் செய்தன சில இழிந்த பத்திரிக்கைகள்... தர்மத்தின் மகனை தன் மகனாய் எடுத்து உயர்வு சேர்த்தன வானத்தின் நட்சத்திரக்கைகள்... இவர் எளிமைகளின் நேசம் இவரிடம் பாடம் கற்க வேண்டும் இந்த தேசம்... அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாதவர்.... இருக்கும் சொத்தையும் எடுத்து கொடுத்ததில் ஓசைப்படாதவர்......
சிறுகதை

மீகாமன்

“என்னங்க! இந்த ரோட்டைப் பார்த்தீங்களா? பளபளன்னு என்னமா பாலிஷ் பண்ணி வச்ச்சிருக்காங்க பாருங்க! இப்படித்தான் எல்லா ரோடும் இருக்குமாங்க, குஜராத்தில? அதனாலதான், ஒரு அலுங்கல், குலுங்கல் இல்லாம, பஸ் போறதைப் பாருங்க!” தன்னுடைய கணவரிடம் சற்று சத்தமாகவே, உற்சாகத்துடன் கதைத்துக் கொண்டிருந்தாள் அந்த வயதான பெண்மணி. அவளும், அவளின் கணவரும் வயதில் மிகவும் மூத்தவர்களாகத் தெரிந்தார்கள். கடந்த மூன்று நாட்களாக, தனியார் சுற்றுலா ஏஜன்ஸி மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த...
சிறுகதை

மனைவி அமைவதெல்லாம் …

நிறைமாத கர்ப்பிணியான பார்கவியை அவளது கணவர் வசீகரன் துரிதப்படுத்தினான். பார்கவி சீக்கிரம் கிளம்பும்மா, ஆஸ்பிட்டல் செக்கப் முடித்துவிட்டு அப்படியே சிறந்த பேச்சாளர் தேர்வுக்கான மீட்டிங் செல்லவேண்டும் மறந்துட்டியா என்றான். இதோ கிளம்பிட்டேங்க ஒரு அஞ்சு நிமிஷத்திலே ரெடியாயிடுவேன். ஒரு சின்ன ஹெல்ப் ஃப்ளாஸ்க்ல 'கொஞ்சம் வெந்நீர் எடுத்து வைங்க வசி' என்றாள் பார்கவி. பார்கவி பெயருக்கு ஏற்றார் போல கவிதை நடையாலும் பேச்சுத்திறனாலும் உலகையே (பார்) வெல்லும் அளவிற்கு பெயர்பெற்றவள்....
இலக்கியம்

‘தமிழ் இலக்கியத்தில் இன்றைக்கு பெண்களின் படைப்பாற்றல் பாராட்டத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது’ பால சாகித்திய புரஸ்கார் விருதாளர் மு.முருகேஷ் நம்பிக்கை

நாகர்கோவில் : நாகர்கோவிலை அடுத்த நெய்யூரிலுள்ள இலட்சுமிபுரம் கலை - அறிவியல் கல்லூரியில் வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமமைப்பின் 16-ஆம் ஆண்டு விழா, கவிஞர் மீராவின் 86-ஆவது பிறந்த நாள் விழா, நூல்கள் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா அக்டோபர் 10 வியாழனன்று கல்லூரியின் இலக்குமி சிற்றரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேத்தி கவிஞர் உமாபாரதி தலைமையேற்றார். ஹோலிகிராஸ் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி.ஆன்சி...
1 2 3 4 5 45
Page 3 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!