மணிநேர காத்திருப்பு…!!!
உச்சி மேகத்தின் திடீர் மழைக்கு அத்தனை பொருட்களையும் அவசரக் கதியில் மூட்டை கட்டுகிறான் சாலையோர சந்தை வியாபாரி நொடி ஒன்று நிமிடமாவதற்குள் பொழிந்த மழை ஒளிந்து கொண்டது கட்டிய மூட்டையின் முடிச்சை அவிழ்ப்பதற்குள் கொடுத்தக் கடனின் தவணை பாக்கிக்காய் வசை மொழி பாடுகிறான் வயிறு பெருத்த தனவான் அடுத்த மழையை கணிக்கும் சாக்கில் அண்ணாந்து பார்த்தவன் அவிழும் கண்ணீருக்கு அணை கட்டிக் கொள்கிறான் ஈரக்கடியில் கடை விரித்தவன் இன்றைய பிழைப்பிற்கு...