போய் வா கணவா பொழுதோட…
சிறுகதை : "வாடி ஒரு எட்டு போயிட்டு வருவோம் அப்படியே கல்லு மாதிரி நீயும் உட்கார்ந்து மாவு அரைச்சுக்கிட்டு இருக்க. என்னதான் இருந்தாலும் உறவும் உரிமையும் இல்லாம போகுமா." ஆட்டுக்கல்லில் மாவரைத்து கொண்டு இருந்த ரேணுகாதேவி, மாலதி அக்காவின் பேச்சை கேட்காது போல இன்னும் கவனமாக வேகமாக மாவரைத்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் ஒளிர்ந்தன. விட்டு விட்டு கேட்கும் குயிலின் ஓசை போல அவள் மனதும் விட்டுவிட்டு மூச்சு வாங்கியது. நேரம்...