பணத்தால் அடித்தாலும் வலிக்கும்
''நீ சின்ன பொண்ணும்மா... உனக்கு அந்த பையனோட அழகும், வேலையும் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும். அதுக்கு மேலயும் நிறைய விஷயங்கள் இருக்கு. அதை புரிஞ்சுக்கோ.” “அழகை மட்டும் பார்த்து முடிவு பண்ற அளவுக்கு நான் ஒன்னும் சின்னப் பொண்ணு இல்லைப்பா. எனக்குத் தெரிஞ்ச வரை அவருக்கு பெரிசா கெட்ட பழக்கங்கள் எதுவும் கிடையாது. நல்ல வேலையில இருக்கார். அவர் சொல்றத வச்சுப் பார்த்தா… நல்ல ஃபேமிலின்னுதான் தோணுது. வேற என்ன...