தூக்கணாங்குருவி குடம்பை
நீரிலிருந்தும் அழுகாத நீரின்றியும் வாடாத உடற்பிணி அண்டவிடாத உடற்சூட்டை தணிக்கும் தூய்மையான இடத்தில் செழுமையாக வளரும் துவளாத தூயப்புல் தருப்பை புல்லெடுத்து ஆற்றங் கரையோரத்தில் அரவம் வரமுடியாத வரிசையாக உயர்ந்து வளர்ந்து நிற்கும் தென்னை, பனை, ஈச்ச மரத்தின் உச்சியிலே குடுவை போன்று குடம்பை கட்டி வீசப்போகும் பருவக்காற்றுக்கு நேர்எதிர் திசையில் குறுகிய நுழைவு வாயில் வைத்து இரண்டாக வகுத்து ஈரறைகள் அமைத்து ஓரறைஅம்மையப்பருக்காம்மற்றோரறை குஞ்சுகுறுமன்களுக்காம் சிறுசிறு களிமண் உருண்டைகளை...