அன்புத்தோழி ஜெயஸ்ரீ : கவிதைகள்
ஆ சொல்லு சோறு ஊட்டினாய் நசுக்கிப் பிசைந்து குழைந்து கலந்து கால இடைவெளிகளோடு நாவில் பூசியதன் நாமங்கள் பல ஈரம் வடித்து வெந்த அச்சோற்றில் இத்தனைப் பூசணிக்காய்களையா மறைப்பாய் பொறுமை அமைதி தத்துவம் தீர்வு என்ற பெயரில் விலகல் புறக்கணிப்பு ஏமாற்று துரோகம் உனதான தப்பித்த வழங்கலை மென்று முழுங்குவேன் சோறல்ல முகத்தில் பூசிய சேறென்று தெரிந்த பின்னும் புழுவாகிய நான் ஆதிவாசியின் சிறுசுடர் நீயாகவே விலகினாய் அனல் பொழியும்...