கவிதை

கவிதை

போகிப் பொங்கல்

குப்பைக் கூளங்கள் விடுத்து மனக் குப்பைகள் எரி... அறிவு வளர்த்து அறியாமை எடுத்தெறி... எடுத்தெரி... நற்பண்பு மிகக் கொள் நச்சுகள் கொளுத்து... நாகரிகம் பேணு அநாகரிகம் அறு... திராவிடம் போற்று வீரத் தமிழனாய் உயர்ந்து நில்... நேரியம் காத்தல் செய் ஆரியம் அச்சம் கொள விடு... வர்ணாசிரமச் சாத்திரப் பகைவெல்-மாட்டு மூத்திரச் சாணியில் இயற்கை உரம் செய்... உழைப்புப் பேணுக... உழவைப் பேணுக... உழவரைப் போற்றுக... இயற்கைப் பேணுக.. ஏறு...
கவிதை

பொங்கல் கவிதைகள் : 1

நிறைய கரும்பும் கொஞ்சம் மஞ்சள் கிழங்குமாக உள்நுழையும் அப்பாவை தொழுவதிலிருந்து குரலெழுப்பி வாஞ்சையாய் விசாரித்த லட்சுமி .... கொஞ்சம் வெண்பொங்கலும் நிறைய பூசணிக்காயுமாக வளையல் சத்தத்தில் படையலிடும் அம்மாவை கழுத்துமணி குலுங்க சுற்றிவந்த குழந்தையாக ராஜி ... பத்தாயத்தில் நிரம்பிய காணிநிலத்தை அளந்துக் கொட்டிக்கொண்டிருக்கும் தம்பியின் விளையாட்டு தோழனாக மாறியிருந்த கருப்பன் ... வழக்கமாய் பொங்கல் வைக்கும் களத்து மேட்டில் வயக்காட்டிலிருந்து விதைநெல்லுடன் வந்த அக்கா... புழுதியில் படிந்த தலையை...
கவிதை

பொங்கலோ பொங்கல்

சூரியனை எழுப்புகின்ற சூரியன் கடிகாரத்தில் வீரியன் வெற்று உடலால் உழவன் உழைப்பான் உழவனின் உழைப்பை போற்றும் பெருநாள். ஏலே ஏலே ஏலே ஏலே இந்த பாட்டு இனிதாய் மலரும். பானையிலே பொங்கிலிட்டு. நெய் ஊற்றி இறைவனை வணங்கிடுவோம் தரணியெங்கும் வளம் தழைக்கட்டும். உள்ளமெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும். உழவனை போற்ற பிறந்த நாள் விழா. உழைத்திடு உழைத்திடு வெற்றி யை பெற்றிடு. மண்ணிலே புதிதாய் தோன்றியது. மனகமலும் பானை பல வண்ணங்களோடு....
கவிதை

கலைவாணர் நினைவாலயம்

கலைவாணர் வீடு ... அது கலைந்த கூடாகி நாளாயிற்று ... மதுர பவனம் துயர பவனமாகி ஆண்டுகள் பல வாயிற்று .... செழித்திருந்த மாளிகை இன்று சீரழிந்து கிடக்கிறது... அவர் குடியிருந்து கோலோச்சிய கோயில் குற்றுயிராய்க் கிடக்கிறது ... கலை மாளிகைதான் அன்று ... ஆனால் இன்றோ கலையும் நிலையும் குலைந்த மாளிகை... கலை உலகில் கோலோச்சியவன் மறைந்து போன சில ஆண்டுகளிலேயே கரைந்து போனது இந்த மாளிகையும்... அடிக்கடி...
கவிதை

வார்த்தையின் வேண்டுதல்

உனக்கும் எனக்கும் இடையில் சிறைப்பட்டுக் கிடக்கும் வார்த்தைகள் மவுனத்தின் மரணத்தை வேண்டுகின்றன... அவிழ்ந்து கிடக்கும் கும்மிருட்டிலும்... இடறும் கால் முட்டி நுனியிலும்... பிளக்கும் பூமியின் பல்லிடுக்கிலும்... உதிர்ந்து உருளும் ஒற்றை மயிரின் குழம்பு ஒட்டிய உடலிலும்... தேய்ந்து போன பிடிவாதத்தின் தேகம் மெலிந்த தீச்சுவாலையிலும்... ஒளிந்து நெளிந்து ஒடிந்து போய் நடுங்கி உளறும் நலம் விசாரிப்பிலும்... தேடுவதையே மறந்து பாதை எங்கும் நிலைக்குத்தி நின்று உன் வாசம் பார்க்க புரளும்...
கவிதை

இருத்தல்

இருத்தல் முக்கியம்... நீ நீயாக இரு... மற்றவர் சுமை சுமக்கும் வேறாக அல்லாத நீயாக... யாருக்காகவும் எப்போதும் மாறிப் போகாத நீயாக ... மாசுகளின் துக்கமாக அல்ல மாண்புகளின் பக்கமாக... வாழ்க்கை முக்கியம்... வந்து போவதல்ல வாழ்க்கை... வீண் வேடிக்கை இல்லைதான்... விளையாடத் தேவையில்லை... வினையாடல்கள் வேண்டும்... வினைதான் ஆடவர்க்கு உயிர்.. திரைகடல் ஓடியும் திரவியம் தேட இப்போதெல்லாம் கப்பல் ஏறிப்போகத் தேவையில்லை... ஒரு கணிணி இருந்தாலே போதும்... இறப்புக்கு...
கவிதை

புத்தாண்டே வருக வருக

2025 புத்தாண்டே வருக வருக புவியினில் சரித்திரம் படைப்போம். 2025புத்தாண்டே வருக வருக மனித நேயம் மலரட்டும் மாற்றார் கருத்தையும் மல்லிகையாய் ஏற்போம் சாதி மத பேதமின்றி சமத்துவமாய் வாழ்வோம் இவ்வுலகில் வறுமை மறையட்டும் வாழ்க்கை சிறக்கட்டும் பொதிகை மலை தென்றலிலே புகுந்து வரும் செந்தமிழே புத்தாண்டு மலர்ந்தது புன்னகை பிறந்தது நல்லோர்கள் வாழட்டும் நன்மைகள் நடக்கட்டும் புதுமைகள் பிறக்கட்டும் புத்துயிர் வளரட்டும் புதியதோர் உலகம் படைப்போம் புதிய சிந்தனைகள்...
கவிதை

ஜனங்களின் மனம் குளிரும் ஜனநாயக புத்தாண்டு மலரட்டும்…!

பாரதத்தில் மனிதநேயம் பகுத்தறிவோடு மலரட்டும் ஜனநாயக புத்தாண்டு ஜனங்களிடம் சிறக்கட்டும் ஆளுகின்ற பொறுப்பாளியின் அதிகாரம் விலகட்டும் ஒரேநாடு ஒரேமொழி ஒவ்வாமை ஒழியட்டும் பதில்கள் தெரியாத பச்சோந்திகள் புதையட்டும் சாசனசட்டத்தை திருத்தும் சங்கிகள் மறையட்டும் கல்வி செல்வத்தால் காசவில் நுழையட்டும் பூரண மதுவிலக்கு புண்ணியமாய் இருக்கட்டும் கூட்டாச்சி தத்துவம் குதூகலமாய் குலுங்கட்டும் இந்தியாவின் முன்னேற்றம் இளைஞனிடம் பெறுகட்டும் விவசாயத் தொழிலுக்கு விடிவுகாலம் பிறக்கட்டும் நாளுக்குநாள் கலவரங்கள் நடப்பதை தடுக்கட்டும் சர்வாதிகார ஆட்சியில்...
கவிதை

பாலன் பிறப்பும் பாவத் துறப்பும்

அது பேரிறைவன் அற்புதத்தின் பெருங்கருணை... கன்னி மரியாளுக்கானது கருத்தன் பரிசானது... தந்து சொன்னது கண்ணியம் ஆனது "அவர் என் வார்த்தையாய் இருக்கிறார்... " கண்ணியமாக்கப் பட்டது இறைத்தூதர் அத்தாட்சி... அவதூறு பேசிய அக்கம் பக்கத்தார் வாய்களை அந்தக் குழந்தையின் அற்புதமான மொழிவீச்சுதான் மூடியது ... நீண்டு நடந்த பிரார்த்தனைகள் நிமிடங்களுக்குள் கிடைத்தன... நிம்மதி தரும் கனிக்குலைகள் பாலாற்று நீர் ... பசியாறி மகிழ்ந்தார் அன்னை ... பாவங்கள் இல்லாத அன்னை...
கவிதை

“சுனாமி” – நினைவலைகள்

சுனாமி, காலனின் பினாமி! அகலக் கால்வைத்த ஆழிப்பேரலையால் - தமிழ்க்கரையின் நீளம் பார்த்தது - மரணங்களின் நீலம் பூத்தது - மறக்க முடியா ஓலம் கேட்டது. 2004 டிசம்பர் இருத்தியாறு. பல்லாயிரக்கணக்கான உயிர்கள் புல்லாகிப்போகுமெனக் கண்டது யாரு? கடலடியில் பாறைத் தட்டுகள் இடறியதாம் - அதற்கு இந்தோனேஷியாவில் கோபித்துக் கொண்டவள் இங்கு வந்து சீறிவிட்டுச் சென்றாய் - விதிகளைத் திருத்தி, சீவிவிட்டுச் சென்றாய் - காலனை எங்கள் மீது ஏவிவிட்டுக்...
1 2 3 4 5 16
Page 3 of 16

Right Click & View Source is disabled.

error: Content is protected !!