பாவலரின் சொல்லாற்றல்…..!
பாவலர் சதாவதானம் செய்து கொண்டிருக்கும்போது ஒருவர் ஈற்றடி கொடுத்து பாடச் சொன்னார்... ''கண் கெட்ட பின்னென்றும் காணாத காட்சியைக் கண்டனரே" எல்லோரும் திகைத்தனர்... அது எப்படி முடியும்...? கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்களே அது போல் அல்லவா இருக்கிறது... பாவலர் திகைத்தாரில்லை... இந்து மத வேதங்களையும் இலக்கியங்களையும் விரல் நுனியில் வைத்து விளையாடும் அவர்க்கு இந்த ஈற்றடித் தலைப்பு எம்மாத்திரம்...? அவர்க்குப் பெரிய புராணத்தின் காட்சி ஓன்று...