காதுல பூ – நாடகமும் நானும்
மழைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருகிறது சென்னை... இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சென்னை வெள்ளக்காடாகலாம். பல மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உலாவர ஆரம்பிக்கலாம். செய்தி தொலைக்காட்சிகள் போர்க்காஸ்ட்டிங் செய்ய தொடங்கிவிட்டிருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை சோம்பலை புறந்தள்ளி விட்டு கிளம்பலாம் என்று ஆயத்தமாகி விட்டேன். 'நாடகம் பார்க்க வாங்களேன் ...நீங்க என்னோட கெஸ்ட்...' என்று அன்புடன் அழைத்தார் அந்த பிரபலம். சமீபத்தில் தான் எனக்கு அவருடன்...