தமிழகம்

மது போதை தாறுமாறாக ஓடிய கார் பலர் காயம்

37views
மதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து இரவு 9:15 மணி அளவில்TN59CL555 என்கின்ற கார் பைபாஸ் சாலையில் பறந்து வந்த அந்த கார் முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் கார் உள்ளிட்ட இது மோதியபடியே சென்று கொண்டிருந்தது இதில் பலர் காயம் அடைந்தனர்.
பெத்தானியாபுரம் பகுதி ஆரப்பாளையம் சந்திப்பு இரண்டு கார்கள் 4.5 மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் இருந்தவர்கள் காரை மறித்தனர் நான்கு பேரும் மது போதையில் இருந்ததை கண்டு அவர்களை இழுத்து அங்கே பொதுமக்கள் சிறப்பான கவனிப்பு கவனித்து இந்த காலோபரத்தில் இருவர் தப்பி ஓடி விட்டனர்.  சிக்கிய இருவர் அந்தோணி வயது 29 சுல்தான் வயது 28 பொதுமக்கள் சிறப்பான கவனிப்பில் காயம் அடைந்த போதை ஆசாமிகளை மீட்ட  காவல்துறையினர் 108 அவசரகால ஊர்தி மூலமாக சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.  எப்பொழுதும் பரபரப்பாய் காணப்படும் பைபாஸ் சாலையில் மது போதையில் காரை இறக்கி பல வாகனங்களை சேதப்படுத்தி பலரை காயப்படுத்திய நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.  இது தொடர்பாக கரிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் இருசக்கர வாகனத்தில் மட்டும் காவல்துறையினர் மது போதையில் இருக்கிறார்களா என சோதனை செய்யும் காவல்துறையினர் நான்கு சக்கர வாகனம் அதாவது கார்களிலும் வருவர்களையும் கட்டாயமாக பிரீத் அனலைசர் மூலமாக கட்டாயமாக சோதனை செய்ய வேண்டும் எனவும் இல்லையென்றால் மிகப்பெரிய விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது எனவும் காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  இனி வரும் காலங்களில் கார்காலில் வரும் நபர்களிலும் கட்டாயமாக மது போதை சோதனை நடத்த வேண்டும் என்பதை அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!