வணிகம்

கௌதம் சோலார்

40views
தென்னிந்தியாவில் கௌதம் சோலார் பிரகாசிப்பதற்கு தயாராக உள்ளது – உள்ளூர்களிலேயே டாப்கான் மாடியூல்கள் இரண்டு அதிநவீன கிடங்குகளில் இருந்து கிடைக்குமாறு வகை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவில் ஒரு வளர்ந்து வரும் பெயரான கௌதம் சோலார், தென்னிந்தியாவின் சூரிய ஒளியை உபயோகித்து அந்தப் பகுதியின் வளர்ச்சி செயல்பாடுகளுக்கு உபயோகப்படுத்துவதற்கான தனது திட்டங்களை வெளியிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற “கௌதம் சோலார் தொழில்நுட்ப பட்டறை மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில்”, தனது வளர்ச்சி திட்டம் மற்றும் அந்த பகுதியில் கால் பதிக்க தான் எடுத்து வைத்த படிகள் பற்றி அந்த நிறுவனம் ஊடகத்திடம் தெரிவித்தது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவில் முப்பது வருட கால ஈர்க்கக்கூடிய வகையிலான பாரம்பரியத்துடன், கௌதம் சோலார் தற்போது தென் மாநிலங்களின் சோலார் கட்டமைப்பை வலுப்படுத்த இரண்டு அதிநவீன கிடங்குகளுடன் கவனம் செலுத்துகிறது. இந்த மூலோபாய முன்முயற்சியானது தென்னிந்தியாவில் இந்த நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட மையில்கல்லை பதிக்கிறது. சென்னை போன்ற முக்கிய மையங்களுக்கு உயர்தர சோலார் பேனல்களை விநியோகித்து அணுகல் செய்வதை உறுதிப்படுத்துவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவை ஒரு தலைசிறந்த சோலார் மையமாக நிறுவுவதற்கான கௌதம் சோலரின் ஈடுபாட்டை வலுப்படுத்துகிறது.
நிறுவனத்தின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டாப்கான் சோலார் மாடியூல்களுக்கு இந்தப் பகுதிக்குள் திட்ட உருவாக்குனர்கள், EPC நிறுவனங்கள் மற்றும் அமைப்பு ஒருங்கிணைப்பாளர்களுக்கு இவர்கள் வேகமான அணுகலை ஏற்பாடு செய்து கொடுப்பதால், கௌதம் சோலாரின் மூலோபாய முன்னேற்றங்கள் தென்னிந்தியாவில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இந்த சோலார் பேனல்கள் உள்ளூரிலேயே சர்வதேச தரத்திற்கு தயாரிக்கப்பட்டு, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பத்தின் நிபுணத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
கௌதம் சோலாரின் CEO, திரு கௌதம் மோகன்கா “தென்னிந்திய சந்தைக்குள் நாங்கள் காலடி எடுத்து வைத்திருப்பது கௌதம் சோலாருக்கான ஒரு முக்கிய தருணத்தை குறிக்கிறது. கர்நாடகா மற்றும் கேரளாவில் எங்கள் புதிய கிடங்குகளை நிறுவியுள்ளது இந்த மாநிலங்களுக்கு அதிநவீன சோலார் தீர்வுகளுக்கு விரைவான அணுகலை வழங்குவதற்கு எங்களை அனுமதிப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாடு (ராமநாதபுரத்தில் ஏற்கனவே எங்களுக்கு ஒரு சேவை மையம் இருக்கிறது) மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற அண்டை பகுதியில் இருக்கும் நுகர்வோர்களுக்கும் சிறப்பாக சேவை வழங்க அனுமதிக்கிறது. உள்ளூர் சமூகங்களை வளப்படுத்துவதன் மூலம் புதிய மாற்றத்திற்கு அழைத்துச் சென்று, இந்த பகுதிகளில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான எங்கள் ஈடுபாட்டையும் மற்றும் நாங்கள் ஒரு பசுமையான மற்றும் அதிக நீடித்து நிலைத்திருக்கக் கூடிய எதிர்காலத்திற்கு பங்களிப்பதையும் இந்த நடவடிக்கை மறுஉறுதி செய்கிறது” என்று கூறி இந்த விரிவாக்கத்திற்கான தனது உற்சாகத்தை தெரிவித்தார்.
தலைசிறந்த 10 இந்திய சோலார் மாடியூல் தயாரிப்பாளர்களில் தரவரிசை படுத்தப்பட்டுள்ள கௌதம் சோலார், அந்த நிகழ்ச்சியில் உலக தரத்துடன் ஒப்பிடும்போது இந்திய தொழில்நுட்பத்தின் தரம் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான, சோலார் தயாரிப்பில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறனை எடுத்துக்காட்டியது.

நிதிநிலைத் தன்மை மற்றும் வளர்ச்சியைப் பொருத்தவரையில், கௌதம் சோலார் ஒரு ‘CRISIL BBB+/Stable’ நீண்ட கால மதிப்பீடு மற்றும் ஒரு ‘CRISIL A2’ குறுகிய கால மதிப்பீடு உட்பட, CRISIL-இடமிருந்து வலுவான மதிப்பீடுகளை பெற்றுள்ளது. இது இந்த நிறுவனத்தின் நிதிநிலை வலிமை மற்றும் செயல்பாட்டு திறன்களை எடுத்துக்காட்டுகிறது.
மேலும் இந்த நிறுவனம் சமீபத்தில் இரண்டு வெள்ளை தாள்களை பிரசுரித்துள்ளது: ஒன்று உச்சபட்ச காலநிலையில் சோலார் பேனல்களில் எதிர்கொள்ளப்பட்ட சவால்களை பற்றி பேசுகிறது, மற்றொன்று PM-KUSUM திட்டத்தின் கடுமையான அளவுகோல்களை பூர்த்தி செய்வதில் சோலார் உருவாக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவளிக்கிறது. இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை முன்னேற்றுவதற்கான கௌதம் சோலரின் உறுதிபாட்டிற்கு இந்த முன்முயற்சிகள் வலுவூட்டுகின்றன.
கௌதம் சோலார் பற்றி
கௌதம் சோலார் (www.gautamsolar.com) 27+ வருடங்கள் சோலார் துறையில் அனுபவம் வாய்ந்த ஒரு சிறந்த இந்திய சோலார் மாடியூல் தயாரிப்பாளர் ஆகும். இதற்கு மொத்தம் 4 தொழிற்சாலைகள் உள்ளன, இந்தியாவில் உள்ள இரண்டு மாநிலங்களான உத்தரகாண்ட் மாநிலத்தில் 3, ஹரியானா மாநிலத்தில் 1 உள்ளது. இந்தியாவின் புது தில்லியில் உள்ள அதன் கார்ப்பரேட் அலுவலகத்துடன் இணைந்து, கௌதம் சோலார் இந்த ஆண்டில் அதன் சோலார் மாடியூல் திறனை 2.5 GWp ஆகவும், அடுத்த ஆண்டு 2025-26 இல் 5 GWp ஆகவும் விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. கௌதம் சோலாரின் பேனல்கள் புதிய டாப் லைன் எந்திரங்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இது தன் பெயரில் பதிவுசெய்யப்பட்ட பல காப்புரிமைகள் மற்றும் IPகளைக் கொண்டுள்ளது மற்றும் அதன் தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்த மற்றும் புதுமையான சோலார் மாடியூல்களுக்கு என பெயர் பெற்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!