தமிழகம்

மதுரை காமராஜர் பல்கலை எதிரே ருபாய் 40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் விரைவில் பயணிகள் போக்குவரத்திற்கு திறக்க பொதுமக்கள் கோரிக்கை பாலத்தில் தாமதமாகும் மின் விளக்கு அமைக்கும் பணியை விரைந்து முடிக்க மின்வாரிய, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

97views
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகம் எதிரே 40 கோடி மதிப்பில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது.
காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் தொலை நிலை கல்வி மையங்களில் மக்கள் ரோட்டின் குறுக்கே செல்வதற்காக பாதை ஏற்படுத்தப்பட்டு அமைக்கப்பட்ட புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து ஆறு மாதங்கள் ஆகின்றது.
மேலும் பாலத்தின் மேல் மின்விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளதால் பாலம் திறப்பதில் தாமதம் ஏற்படுகிறது என பொதுமக்கள் கூறுகின்றனர் .
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து மின்விளக்கு அமைத்து போக்குவரத்திற்கான பாலத்தினை திறந்தால் மதுரை – குமுளி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் பாலத்தின் மேல் செல்லும் என்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் விரைவாக பயணிக்க ஏற்பாடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இது குறித்து வாகன ஓட்டுனர் சேர்மக்கனி கூறுகையில் பாலம் பணிகள் முடிந்த ஐந்து மாதங்கள் ஆகிறது 40 குடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது விரைந்து முதல்வர் திறந்து வைத்தால் பொது மக்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவும் பயண வசதிகள் ஏற்படும் எனக் கூறினார் இதே போல் பல்கலைக்கழக ஊழியர் பெத்து முனியாண்டி கூறுகையில் பாலம் வேலை முடிவடைந்து 5 மாதங்கள் ஆகியுள்ளது. முதல்வர் திறந்து வைத்ததால் பல்கலைக்கழகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு பொதுமக்கள் மிகவும் வசதியாக இருக்கும்.
ஆகையால் விரைந்து பணியை முடித்து பாலத்தை திறந்து வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!