கட்டுரை

நடுநிசியில் எரியும் மழை – கவிதை நூல் விமர்சனம்

327views
ஆசிரியர் : வசந்தன்
காய்ந்த முள்ளால்
கீறி நலம் விசாரிப்பவர்களே,, உண்மையை சொல்பவனிடம் தான் உலகம் இப்படி நடந்து கொள்ளும் என்பது
எத்தனை உண்மையான
வாக்குமூலம்.,,
காதல் மனதின் கல்லறைகளில்,
ஒளிர்வது விளக்கல்ல,
அன்பின் ஆன்மா,, என்பது வசந்தன் அவர்களின் ஆன்மாவின் அகல் .
கருணையின் நிழலில் கிடத்த இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும் ஏங்குகிறது என்பதை நினைவுபடுத்தும் அந்தி அழகு. உடலை எரிக்காமல் புகையும் நெருப்பே தலைப்பாக நடுநிசியில் எரியும் மழை என காதலின் வலி உண்ர்த்தும் தலைப்பு அருமை.
பிரியம் செலுத்தும் உயிர்களுக்காக வாழ்வது தான் நம் கடமையாக மாறிவிட்டது என்பதை ஓர் அழகற்ற தேவன் என்ற கவிதையில் சபிக்கப்பட்டவனின் வாழ்வு எவ்வாறு தினமும் மிதிபடுகிறது என்பதை அழகியலின் சோகம். ஆனால் பிழைத்திருக்கும் உயிரோ தனியான உலகத்தில் அவர்களுக்கான நட்சத்திரங்களோடு கவிதைகளோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
உயிர் வேகும் இரவுகளில்
பொய்யொன்று சொல்லச் சொன்னவளிடம்,,,
உண்மையாகவே சொன்னேன்,,,அழகாக
இருக்கிறாளென்று,,,,
இப்படியாக கனவு களில்
வாழ்கிறது காதல்,,,
மரணம் என்பது- கருணை …… என்பது எத்தனை உண்மையான வார்த்தை. ஆசைகள் முற்றுபெறாதவன்,,,
இருளை அணிந்து கொண்டு உறங்குகிறான். வலிகள் நிறைந்த வாழ்வின் கதை,
குற்ற உணர்வில் திருமணமாகிப் போன காதலியின் விடை பெறாத வார்த்தை துளி விஷமாக அவனை பலி தீர்க்க துரத்துகிறது. துயிலிலும் காதல் என்பது காலத்தின் பிழைகள்தான்.
இசைப் பெட்டியோ
அவள் தந்தது,,,
பாடுவதோ,,,, எனக்கான
பல்லவி களை,,,
ஞாபகங்களே,,,,
ஒரு…
மெளன வாக்குமூலம்,,,,
நேசங்களின் காயம் இரணமாகும்.
நேரம்,,,,,புத்தனைப் போல்,,,,ஆசையே,,,
அத்தனைக்கும் காரணமாம் ……என முத்தாய்ப்பாய் முடியும் ஒற்றை ஆசை. மனவெளியில் மேயும்
ஆட்டுக்குட்டிக ளுக்கு விலையில்லை. ஏக்கம் மிஞ்சியநவீன வாழ்வு, கருணையின் ஈரம்.. இருக்கும் வரையே
நம்பிக்கையும் முளைக்கும். அதற்கு துரோகங்களை சலிக்காமல் கடந்து செல்ல பழகும் மனது வேடிக்கை பார்ப்பவனின் கைகளில் உள்ள தீக்குச்சி.
நம் வாழ்வு,,, மகளிர் தினம் ஓடும் மான் களின் வேகத்தில் தொண்டையை கவ்வும் சிறுத்தைகள் கொண்டாடுகின்றன. கறை படிந்த சமூக அவலம் மெளனமாக.
வந்து விடு …என் உயிரே
என இறைஞ்சும் மனம்,,
துன்பங்கள் தாண்டியும்
வாழப் பழகு ….என.,, வலையை நீ விரி,,,, என புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது.

வசந்தன்
சவப்பெட்டிகளை இலவசமாக தயார் செய்யும் ஊர். அவள் உயிர் பிழைக்க வழி செய்யாத வாழ்வு சுயநலமானது. தற்கொலைகள் கூட உரிமையாகிறது. கோழைகளுக்கு அது விடுதலையை தரும். வசந்தனின் புலம்பல் கூட யாருக்காவது உரமாகக் கூடும். காதல் ஓசையற்று அழும்போது.
ஒரு தொழுகை ,,
ஒரு ஜெ ப மாலை
சூழ்ச்சிகளை அகற்றாவிட்டாலும், நட்சத்திரமாக ஜொலிக்கும் நம்பிக்கை உனக்கு இருந்தால் போதும். உப்பு கரிக் கும். தேநீர் மறைக்கப்பட்ட பிரிவின் வலி, பரோலில் வரும் மனம் விரும்பிய உயிர். கம்பி வேலியிட்ட மனம்.
உண்மை தான்,,,, பெண்ணுக்கு இன்னும் கிழக்கு வெளுக்கவில்லை.  ஒரே வீட்டில் பிரிந்து கிடக்கும் வலி
உயிரின் மரணம் உயிர்த்திருக்கும் காலம் ஆகும். உன் ஒற்றைப் பார்வையில் அல்லவா என் வாழ்வு
உயிர்த்திருக்கிறது என்பது நிதர்சன உண்மை.
மதுக் குவளைகளுக்கு பதில் …..என் ஆயுளை எடுத்துக் கொள்ளுங்கள். என்பது நடந்து கொண்டிருக்கும் மக்களின் மீது செலுத்தப்பட்ட மறைமுக போரின் வாள் புன்னகையுடன் நிறையும் மனம். மெளனமாக கேட்கிறது வலி களின் துயரத்தை,,,,
கூடு கட்டும் பறவையை அழைக்கிறது வனம். காதல் செய்த வனே நிறப்பிரிகை அடைகிறான். போராளியாக .ஆம் உலகம் உன்னதமானது. இது கவிதைகளல்ல,,,,,,,பலரது வாழ்வின் ஒப்புதல்
வா க்குமூலம்.
காக்கிச்சட்டைக்குள்…..
ஒரு கவிஞனின் தீராத காதலும்,,,,,,
சமூக அன்பும் மிளிரும்.
ஒற்றை நட்சத்திரம் வசந்தன் எனும் மாமனிதனின் முதல் கவிதை தொகுப்பு இது. வாழ்த்துக்கள்
சகோதரனே.
தயானி தாயுமானவன்.

1 Comment

  1. அற்புதமான நூல் அறிமுகம் மற்றும் திறனாய்வு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
    எனது அன்பிற்கினிய தோழி தயானி தாயுமானவன் அவர்களின் இந்த அறிமுகம் நிச்சயமாக கவிஞர் வசந்த் அவர்களுக்கு, அவருடைய இந்த தொகுப்பிற்கு வலு சேர்க்கும் என்று கருதுகிறேன் வாழ்த்துக்கள் வசந்த்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!