விருதுநகர் புத்தகக் கண்காட்சியில், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய நூலை, மதுரை எம்.பி. வெளியிட்டார்
266views
விருதுநகரில், மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகக் கண்காட்சி திருவிழா நடைபெற்று வருகிறது. எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய, தமிழ் சிறுகதையின் தடங்கள் என்ற நூலை எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான வெங்கடேசன் வெளியிட, வழக்கறிஞர் ரவீந்திரன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் எம்.பி. வெங்கடேசன், இலக்கியமும் வரலாறும் என்ற தலைப்பில் பேசினார். பின்னர் பிரபல மேடை பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில், வாழ்க்கைக்கு துணை நிற்பது உறவே – நட்பே என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.






