தமிழகம்

நெல்லை மாவட்ட தமுமுக மமக நிர்வாகக்குழு கூட்டம்; உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல முக்கிய தீர்மானம்

78views
நெல்லை மாவட்ட தமுமுக மமக நிர்வாகக் குழு கூட்டம் நெல்லை மேலப்பாளையம் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.எஸ். ரசூல் மைதீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைத் தலைவருமான P.S. ஹமீது கலந்து கொண்டார். நிர்வாக குழுவில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் செய்யது ஜாவித், தமுமுக மாவட்ட செயலாளர் கோல்டன் காஜா, துணை தலைவர் டவுண் ஜமால், துணைச் செயலாளர்கள் மேலப்பாளையம் அ.காஜா, பாளையங்கோட்டை ஏசி செய்யது அலி, சேரன்மகாதேவி ஷேக், ஏர்வாடி ஏசி பீர் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்டம்‌ முழுவதும் அனைத்து கிளைகளிலும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட அளவில் (தர்பியா) நன்னெறி வகுப்புகள் நடத்த வேண்டும் எனவும், மண்டல வாரியாக தலைமை அறிவித்துள்ள மாநாடுகளில் நெல்லை மண்டலத்திற்கு அறிவிக்கப்பட்ட‌ மண்டல மாநாட்டை சிறப்பாக நடத்துவது, தலைமை அறிவித்துள்ள பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 7-ம் தேதி வரை பெண்கள் உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும் என்ற அறிவிப்பை ‌முழுமையாக செயல்படுத்தும்‌ வகையில் மாவட்டம் முழுவதும் பெண்கள் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடத்துவது, தலைமை கழகம் அறிவிப்புபடி ஜூலை மாதம் பொதுவான உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, மாவட்டம் முழுவதும் அனைத்து ஊர்களிலும் கிளை, பேரூர், ஒன்றியம், நகரம், பகுதி கிளை கழகங்களில் மாதந்தோறும் (சுபுஹு) அதிகாலை தொழுகைக்கு பின்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு (தர்பியா) நன்னெறி வகுப்புகள் நடத்துவது, இந்த வகுப்புகளுக்கு ஐ.பி.பி. மாவட்ட செயலாளரை பொறுப்பாளராக நியமிப்பது மற்றும் அனைத்து கிளை‌ கழகங்களிலும் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் நிர்வாகக்குழு கூட்டம், செயற்குழு, பொதுக்குழு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!