தமிழகம்

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைப்பெற்ற ரத்ததான முகாம்

117views
பிப்ரவரி 15 இன்று கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின்  சமூக மேம்பாடு (கனடா – இந்தியா கூட்டுப் பயிலகத் திட்டம்),கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து தன்னார்வ இரத்த தான முகாம் நடைப்பெற்றது.
இதில் கல்லூரியின் பயிலக மாணவர்கள் மூலம் 96 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற தன்னார்வ இரத்த தான துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் .அலாவுதீன் பேசுகையில் “தானத்தில் சிறந்தது இரத்த தானம் .” அதை வழங்குவோருக்கு வள்ளல் குணம் இருக்க வேண்டும் என்றும், கொடுப்பவர்களுக்கு எந்த வித நோயும், தீய பழக்கங்களும் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். மேலும் முன்பின் தெரியாத யாரோ ஒருவரின் உயிரைக் காப்பாற்ற இரத்தம் பயன்படுகிறது. இரத்த தானம் வழங்கும் நல்ல பழக்கத்தை மாணவப் பருவம் மட்டுமல்ல , எல்லா காலங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் திரு. பாலசுப்ரமணியன் வரவேற்புரையாற்றினார். துணை முதல்வர் திரு.சேக் தாவூத் மற்றும் முனைவர்.சம்சூல் கபீர் ஆகியோர் இரத்ததானம் செய்வது எப்படி நம் ஆளுமையை வடிவமைக்கிறது என்று வாழ்த்துரை வழங்கினர். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இரத்த வங்கி மேலாளர் திரு.ரவி, இரத்ததானத்தால் கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் கிடைக்கும் நன்மைகளை எடுத்துரைத்தார்.
முடிவில் கல்லூரியின் கனடா இந்தியா கூட்டுப் பயிலகத் திட்டத்தின் தொடர் கல்வி மேலாளர் திரு.எஸ்.பி.நாகராஜன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி துறைத் தலைவர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள், கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் முனைவர்.கபீர், செயலர் திரு.சுப்ரமணியன், திரு. மரியதாஸ், திரு.எபன் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!