தமிழகம்

சிவகாசியில், ரத்த தான முகாம்

42views
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், குடியரசு தின சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது. அனந்தப்ப நாடார் தெரு, பாரதி பஜனை மண்டபத்தில், கிங் மேக்கர் சமூக நல இயக்கம் மற்றும் சிவகாசி அரசு பொது மருத்துவமனையும் இணைந்து நடத்திய ரத்த தான முகாமை, சிவகாசி நகராட்சி முன்னாள் சேர்மனும், சிவகாசி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான ஞானசேகரன் துவக்கி வைத்தார். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் அய்யனார் தலைமையில் மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர். சிறப்பு ரத்த தான முகாமில் 100க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் வழங்கினர். முகாம் ஏற்பாடுகளை கிங் மேக்கர் சமூக நல இயக்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!