தமிழகம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் திமுக இளைஞரணி நலத்திட்ட உதவி

98views
திமுக இளைஞரணி செயலார் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளையொட்டி திமுக இளைஞரணி சார்பில் மண்டபம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. மண்டபம் பேரூராட்சி தலைவர் டி.ராஜா தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரும், கவுன்சிலருமான கா.சம்பத்ராஜா தொடங்கி வைத்தார். அவைத்தலைவரும், கவுன்சிலருமான வீ.முருகானந்தம், பொருளாளர் சீனி மீராஸா, கவுன்சிலர் ந.பூவேந்திரன், பொற்கிழியார் சிவ.தில்லை குமார், புரவலர் சைவ சரவணன் முன்னிலை வகித்தனர்.
துணை செயலர் களஞ்சியம், கவுன்சிலர்கள் சீதாலட்சுமி காளிமுத்து, உமா மகேஸ்வரி சரவணன், வார்டு செயலாளர்கள் முனியசாமி, கருப்புவேல், முருகேசன், ஐயப்பன், ராஜா, சக்திவேல், நாகராஜன், மனோகரன், திருமலை, தில்லைநாயகம், தொமுச நிர்வாகி மனோகரன்,
மூத்த நிர்வாகிகள் ஆர்.ஆறுமுகம், டெய்லர் எஸ்.நாகராஜன், ஆனந்தகுமார், பாண்டியன், நாகேஸ்வரன், மூர்த்தி, காளிதாஸ், நகர் அமைப்பாளர்கள் தி.தில்லை கிருஷ்ணா (மாணவரணி), ரஹ்மான் கான் (விவசாய அணி), எம்.களஞ்சிய ராஜா, இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.அரவிந்த், வார்டு பிரதிநிதிகள் போஸ், பி.ரகுநாதன், தட்சிணாமூர்த்தி, சின்னமருது, பெரிய மருது, கலீல், முன்னாள் நிர்வாகிகள் அன்வர்தீன், முனியசாமி உள்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கா.சம்பத்ராஜா ஏற்பாடு செய்தார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!