தமிழகம்

காமாட்சிபுரம் தொடக்கப் பள்ளியில் உதயண்ணாவின் பிறந்த நாள் போட்டிகள்

33views
தேனி மாவட்டம், காமாட்சிபுரத்தில், திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு, தேனி தெற்கு மாவட்ட செயலாளரும்,கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான நா.ராமகிருஷ்ணன் ஆணைக்கிணங்க, சின்னமனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி, காமாட்சிபுரம் ஊராட்சி திமுக சார்பாக ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்து ஏசடியான் தலைமையில் இந்து நாடார் தொடக்கப் பள்ளிக்கு மூன்று கேரம் போர்டுகளை இலவசமாக வழங்கி கேரம்போர்டு போட்டி நடத்தப்பட்டது.
போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக சின்னமனூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர் திருமதி.நிவேதா அண்ணாத்துரை, தேனி தெற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செந்தில், தேனி மாவட்ட ஆதிதிராவிடர் எஸ்சி/எஸ்டி நலக் குழு தலைவர் எஸ்.அழகாபுரி முத்தையா,ஒன்றிய ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினர் ஆர்டிஸ்ட்.சக்திவேல், எரக்கோட்டைபட்டி கிளைசெயலாளர் சுருளிவேல்,இந்து நாடார் தொடக்கப் பள்ளியின் செயலாளர் பச்சைக்கனி முருகன், பள்ளியின் நிர்வாகி சங்கரேஸ்வரன், சுக்காங்கல்பட்டி சமூக ஆர்வலர் இக்னேசியஸ் லயோலா, காமாட்சிபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்,திமுக கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன் பிறப்புகள் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு ஒன்றியக் குழு பெருந்தலைவர் திருமதி.நிவேதா அண்ணாத்துரை, சின்னமனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.அண்ணாதுரை ஆகியோர்
பரிசுக்கோப்பைகளை வழங்கினர்.
இறுதியில் அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் இனிப்புகள் வழங்கி போட்டி இனிதே நிறைவு பெற்றது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. ஆரோக்கியமேரி மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!