தமிழகம்

தங்கச்சிமடம் பள்ளியில் கூடுதல் வகுப்பறை பூமிபூஜை

323views
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் புனித யாகப்பர் பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.24 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டுமான பூமிபூஜை நடந்தது. நவாஸ் கனி எம்பி துவங்கி வைத்தார்.
மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வேலுச்சாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முஹமது, மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலர் நிலோபர் கான், கத்தோலிக்க பங்கு தந்தையர் ஜீவன், மெக்கன்ரே, பள்ளி நிர்வாகி பிரபு, பரதவ சமுதாய தலைவர்கள் சாம்சன், சகாயம் விசைப்படகு மீனவ சங்க தலைவர்கள் சேசுராஜா, ஆல்வின், தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னத்தம்பி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நவாஸ் கனி கூறுகையில் 1 மத்திய அரசு 1முதல் 8 வகுப்பு சிறுபான்மையின குழந்தைகளுக்கான கல்வி உயவித்தெகையை நிறுத்தியது கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற தமிழக விசைப்படகுகள்  காங். ஆட்சியில் உடனுக்குடன் விடுவிக்கப்பட்டன என்றார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!