தமிழகம்

இராஜபாளையம் தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாட்டகரிசல்குளம் ஊராட்சி திருவள்ளூர் நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை கருதி பள்ளி சுற்றுச்சுவர் வேண்டி ஆசிரியப்பெருமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

117views
இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்று அடிக்கல் நாட்டப்பட்டது.  இந்நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் இந்தியாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளிக்கும் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களின் நலனுக்காகவும் கல்விக்காகவும் பட்ஜெட் -ல் 33,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பல்வேறு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி அரசு பள்ளிகளை முன்னிருத்தி வருகிறார்.

அவர்வழியில் சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து இராஜபாளையம் தொகுதியிலுள்ள சொக்கநாதன்புத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் திருவள்ளூர் நகரிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி அயன் கொல்லங்கொண்டான் ஊராட்சியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி இராஜபாளையம் நகரில் உள்ள S. Sஅரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது எனக்கூறினார்.  மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ்  துணைத் தலைவர் துரைகற்பகராஜ் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலா கவுன்சிலர்கள் நவமணி வள்ளிமயில்ராஜா காமராஜ் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் மாரிமுத்து மாவட்ட பிரதிநிதி திருக்குமரன் இளைஞரணி துணைஅமைப்பாளர் மாரிமுத்து அங்குராஜ் ராமசுப்பு ரமேஷ் கதிரேசன் ஜூலியர்ஜீசர், மாரி மற்றும் ஆசிரியப் பெருமக்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!