தமிழகம்

கடந்த 10 மாதத்தில் கடலில் விடப்பட்ட 33.44 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் விஞ்ஞானி தகவல்

53views
பொரிப்பகங்களில் வளர்த்த 33.44 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் கடந்த 10 மாதத்தில் கடலில் விடப்பட்டுள்ளன விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.  மன்னார் வளைகுடா, பாக் ஜல சந்தி கடல் பகுதிகளில் குறைந்து வரும் இறால் மீன்வள மீன்பிடியை அதிகரிக்கவும், மீனவர்களுக்கு உதவும் நோக்கிலும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பொரிப்பகங்களில் வளர்த்த 3.8 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் மண்டபம் அருகே சீனியப்பா தர்ஹா அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விடப்பட்டன.
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர் தமிழ்மணி முன்னிலையில் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி ஜான்சன் கூறுகையில்: இத்திட்டம் தொடங்கிய பிப். 2022 ல் இருந்து இதுவரை 33.44 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் பொரிப்பகங்களில் வளர்க்கப்பட்டு மன்னார் வளைகுடா, பாக்ஜல சந்தி கடற்பகுதியில் விடப்பட்டுள்ளன என்றார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!