தமிழகம்

தேனி மாவட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெரியகுளத்தில் டிசம்பர் 6 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

70views
பாபர் மசூதி விசயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை கண்டித்து தேனி மாவட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெரியகுளம் கே.எஸ்.கே கேண்டின் எதிரில் காலை 11 மணிக்கு மாவட்ட செயலாளர் முபாரக் அலி அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது துவக்க உரையாற்றினார், மாவட்ட ஊடகபிரிவு செயலாளர் அஜ்மீர்காஜா தொகுத்து வழங்கினார். கண்டன கோஷங்களை மாவட்ட துணை செயலாளர் அப்துர் ரஹீம், தேவதானப்பட்டி நகர தலைவர் அலி, பெரியகுளம் சகோதரர் ரபீக், ISF சகோதரர் வாசிம் ஆகியோர் எழுப்பினார்கள்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் யாசர் அராபத், இந்திய உலமா_ஃப்ரண்ட் பொறுப்பாளர் சாகுல் ஹமீது பாக்கவி ஹஜ்ரத் அவர்கள், அல் மதரஸத்துஸ் ஸாலிஹீன் அரபி கல்லூரி ஆசிரியர் முஹம்மது ஷரீப் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள், தமுமுக மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் பத்ரி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொறுப்புக்குழு உறுப்பினர் SRP சூர்யா நாராயணன், துறை திராவிடர் கழகம் பொறுப்பாளர் அன்புகரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

தீர்மானத்தை பெரியகுளம் நகர துணை செயலாளர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் வாசித்தார்.
இந்திய தேசிய லீக் கட்சி மாவட்ட தலைவர் கபூர் மற்றும் தமுமுக மமக நிர்வாகிகள் என பல்வேறு கட்சிகள் அமைப்புகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சிட்டி சாகுல், பெரியகுளம் நகர தலைவர் ஜப்பார் மற்றும் நிர்வாகிகள், தேவதானப்பட்டி நிர்வாகிகள் தேனி நகர தலைவர் காஜா மற்றும் நிர்வாகிகள், கம்பம் நகர செயலாளர் சாகுல் மற்றும் நிர்வாகிகள் என ஆண்களும் பெண்களும் மதரஸா மாணவர்கள் என திராளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!