தமிழகம்

ஆசாதி சாட் – 2 செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்து வெற்றி பெற்றதற்கு உறுதுணையாக இருந்த, திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு குவியும் பாராட்டுக்கள் – இம் மாணவிகளுக்கு தலையில் கிரீடம் சூடி , அப்துல்கலாம் உருவம் பொறிக்கப்பட்ட கேடயம் வழங்கி கௌரவிப்பு

62views
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10 மாணவிகள், கடந்த பத்தாம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ஆசாதி சாட் – 2 என்ற செயற்கைக்கோளை விண்ணில் பாய விட்டு வெற்றிகரமாக செயல்பட்டுவதற்கு உறுதுணையாக இருந்து செயற்கைக்கோளுக்கான உதிரிபாகங்களை தயாரித்து கொடுத்த பத்து மாணவிகளுக்கு கல்வி மேலாண்மை குழு சார்பில் திருமங்கலம் நகராட்சி 10 வது வார்டு கவுன்சிலர் ரம்ஜான் பேகத்தின் கணவர் ஜாஹீர் உசேன்,  இம் மாணவிகளுக்கு தலையில் கிரீடம் சூட்டியும் , அப்துல் கலாம் உருவம் பொறிக்கப்பட்ட கேடயங்கள், சால்வைகள் அணிவித்தும் வழங்கி கௌரவிக்கப்பட்டது . இவ்விழாவில் மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இதில் தலைமை ஆசிரியர் கர்ணன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியை சிந்தியா உட்பட மூவருக்கும் கல்வி மேலாண்மை குழு சார்பாக சால்வை அணிவித்தும், கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!