தமிழகம்

பள்ளி மாணவர்களுக்கு காவல் நிலைய பணிகள் குறித்து விளக்க விழிப்புணர்வு

47views
பொதுவாகவே காவல் நிலையம் என்றால் மாணவர்களிடம் ஒரு சிறு பயம் இருக்கும் என்பதை மாவட்ட காவல் துறை கருத்தில் கொண்டு, தேனி மாவட்டத்தில் காவல்துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் இடையே நல்லுறவை மேம்படுத்தும் விதமாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரேபிரவிண் உமேஷ் இ.கா.ப. அவர்கள் தேனி மாவட்ட காவல் நிலைய அடிப்படை பணிகள் குறித்த தகவல்களை பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்.
காவல் நிலையத்தில் நடைமுறைகள் என்னென்ன,அங்கு எவ்வாறு செயல்படுகிறார்கள் , தவறான செயல்களை கண்டால் எவ்வாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பது என்பது போன்ற தகவல்களை மாணவர்கள் அறிவதற்காக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டது.
போடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் இ.கா.ப உத்திரவின்படி, சின்னமனூர் காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சின்னமனூர் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் சேகர் தலைமையில் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது.
காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து நிலைய உதவி ஆய்வாளா்கள் கோதாண்டராமன், குமரன் ஆகியோர் மாணவா்களிடம் விளக்கிக் கூறினாா்.
மேலும்,அவா்கள் மாணவா்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசியதாவது:
பள்ளி மாணவா்கள் சிறு வயதில் தவறான பாதையில் செல்லக் கூடாது. போதைப் பொருள்களுக்கு அடிமையாகி வாழ்க்கையை வீணாக்காதீா்கள். பாடி பில்டப்பிற்காக கண்ட இன்ஜக்க்ஷன்  வாங்கி பயன்படுத்தக் கூடாது.
எந்தப் புகாராக இருந்தாலும் காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். சட்டத்துக்கு எதிரான செயல் நடப்பதைக் கண்டால், உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
புகார்களை அளிக்க வரும் பொதுமக்களிடத்தில் போலீசார் எப்படி கனிவாக பேச வேண்டும்.மனுவை எப்படி பெற வேண்டும்.மனுவில் அனுப்புநர்,பெறுநர் உள்ளிட்ட விபரங்கள் எப்படி இருக்க வேண்டும். அம்மனுவின் கருத்துக்கள் என்னவாக இருக்க வேண்டும்.
மேலும், காயமடைந்தவர்கள் விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும்,முதல் தகவல் அறிக்கை தருவதற்கு என்னென்ன தேவை என்று மாணவர்களிடம் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும்,காவல் நிலையத்தில் குற்றவாளிகளை கைது செய்தால், நீதிமன்றத்திற்கு அவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களை கையாள்வது குறித்தும், சிறை, துப்பாக்கிகள், கைவிலங்கு மற்றும் காவல் நிலையத்தில் உள்ள துப்பாக்கிகளை குறிப்பாக,”இன்றைய நவீன மயமான காலகட்டத்தில் காட்டிற்கு சிங்கம் போல அன்றைய காலகட்டத்தில் கர்ஜித்த .303 துப்பாக்கியின் வலிமை”யை குறித்தும் அதை அதிகாரிகள் எப்படி கையாண்டு வருகின்றனர் என்பது குறித்தும் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து,காவல் நிலையத்தில் 1000 த்திற்கும் மேற்பட்ட புத்தகங்களால் அலங்கரித்த நூலகத்தை பார்வையிட்டு நிலையத்தில் உள்ள கைவிலங்குகள், சிறை,துப்பாக்கிகள் ஆகியவற்றை மாணவா்கள் பாா்வையிட்டனா்.
சைபர்கிரைம் குற்றங்கள், ஆன்லைன் மோசடிகள் அதனைத் தொடர்ந்த பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பாகவும், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறி தொடர்பு கொள்ள வேண்டிய அவசர கால உதவி எண்கள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கினர்.
இறுதியாக, உங்களது இலட்சியப் பாதையை அடைய… தேனி மாவட்ட காவல் துறையாகிய நாங்கள்…காவல் பணியில் 24 மணி நேரமும் உங்களுடன் நாங்கள் பயணிக்கின்றோம்… எனவாக பயிற்சி மற்றும் விழிப்புணர்வுடன் ஊக்கம் அளித்து வழியனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்வில், சின்னமனூர் நிலைய ஆளிநநர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோா் பங்கு கொண்டு சிறப்பித்தனா்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!