தமிழகம்

ஆண்டிபட்டி பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை

35views
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆண்டிபட்டி பகுதியில் பொதுமக்களுக்கு பல்வேறு மீட்பு பணிகள் மற்றும் பேரிடர் கால உதவிகள் செய்து, விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்களுடன் எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருந்தாளுநர் ந.ரஞ்சித் குமார் இணைந்து மக்களுக்கு பல்வேறு உதவி பணிகள் செய்து வருகிறார். பேரிடர் கால நண்பன் ஆப்த மித்ரா பயிற்சி பெற்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளை தொடர்ந்து தன்னார்வ சேவையாக செய்து வருகிறார். கொரோனா தொற்று விழிப்புணர்வு, கொரோனா பரவலை நூறு சதம் தடுப்பதற்காக கொரோனா தடுப்பு ஊசி விழிப்புணர்வை நமது குழுவுடன் இணைந்து செய்து வருகிறார்.
முக கவசம், கிருமிநாசினி, கபசுர குடிநீர் ஆகியவைகளை வழங்கி வருகிறார். சாலை விபத்துக்கள் ஏற்படும் சூழலில் இவரின் பங்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. பண்டிகை நாட்களில் மற்றும் தமிழ்நாடு வனத்துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையுடன் இணைந்து காட்டில் தீ பரவாமல் தடுப்பது மற்றும் தீயணைப்பு மீட்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். சாலை ஓரங்களில் இருந்து கிடக்கும் நாய்களை அப்புறப்படுத்தியும் அவற்றில் இருந்து நோய் பரவா வண்ணம் அடக்கம் செய்தும், சமூக தொண்டாற்றியவர். மரக்கன்று நடுதல், பராமரித்தல் போன்ற செயல்கள் செய்தும் மரக்கன்று நடுதல், மற்றும் அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். அவசர நேரங்களில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்கு ரத்ததானம் வழங்கியும், சிகிச்சை முடித்து வீடு திரும்பும் வரை அனைத்து உதவிகளும் செய்து வருகிறார். இவர் நமது குழுவுடன் இணைந்து ரத்ததானம் 3 மாதத்திற்கு ஒருமுறை என 41 முறை ரத்த தானம் செய்துள்ளார். இவர் குறித்த தகவல் படங்களுடன் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சியில் சமூகப் பணியாற்றி வருவது குறித்து பலமுறை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!