தமிழகம்

தெற்குதரவையில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

91views
ராமநாதபுரம் ஒன்றியம் தெற்குத்தரவை கிராமத்தில் சிறப்பு கால் நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கால்நடைகளுக்கு பொது மருத்துவம், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. சிறந்த கால் நடை வளர்ப்போர் மற்றும் சிறந்த கிடேரிக் கன்றுகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவி சாந்தி சாத்தையா பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
ராமநாதபுரம் உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
கால்நடை உதவி மருத்துவர்கள், செந்தமிழன், சாரதா, கால்நடை ஆய்வாளர் ஜெகதீஸ்வரி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் பஞ்சவர்ணம் அடங்கிய குழு கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கினர்.  இம்முகாமில் 121 பயனாளிகளின் 190 மாடுகள், 385 வெள்ளாடுகள், 512 செம்மறி ஆடுகள், 110 கோழிகள் 6 நாய்கள் பயன் பெற்றன.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!