தமிழகம்

விபத்து இல்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்

79views
மதுரை மாவட்டம் திருமங்கலம் நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள லிங்கா மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு இடையே விபத்துல்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பிரச்சாரம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
மேற்கொண்டனர் இதில் குடிசை உள்ள பகுதியில் ராக்கெட் உள்ளிட்ட பறக்கும் வெடிக்க கூடாது எனவும் அதிக வெடிகள் உள்ள பகுதிகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வைக்கக்கூடாது எனவும் வெடி வைக்கும் பொழுது அருகில் ஒரு வாலி தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் வெடிக்காத வெடிகளை கைகளில் எடுக்கக்கூடாது எனவும் பாலிஸ்டர் துணிகள் அணிந்து நெருப்பு அருகே செல்லக்கூடாது எனவும் தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் மணலில் உருளக்கூடாது போர்வை வைத்து அனைப்பதும் செய்யக்கூடாது எனவும் தீப்பட்ட பகுதிகளில் உடனடியாக தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்,  தீ விபத்து ஏதேனும் ஏற்பட்டால் 101என்ற என்னிலும் மற்றும் 100 காவல் துறை கட்டுப்பாட்டு மையத்திற்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தீபாவளியை விபத்துல்லா தீபாவளியாக அனைவரும் கொண்டாட வேண்டும் எனவும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!