தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் சிந்தாமணி அருகே 1250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 1 டன் கோதுமை பொருட்களை கடத்திச் சென்ற 3 பேர்‌ கைது

421views
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி சாலையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது அந்த வழியாக வந்த டாட்டா ஏசி வாகனத்தை சோதனை மேற்கொண்டனர் அப்போது சட்டவிரோதமாக ரேஷன் அரிசி மற்றும் கோதுமை பொருட்களில் கடத்தி வந்தது தெரிய வந்தது.
மேலும் சோதனை மேற்கொண்டதில் 1250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 1000 கிலோ கோதுமை பொருட்கள் மூட்டையில் இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் மதுரையைச் சேர்ந்த அரிசி உரிமையாளர் பாண்டி, ஓட்டுனர் விக்னேஷ் மற்றும் கடத்தலுக்கு உதவியாக இருந்த முத்து மணி ஆகிய மூன்று பேரையும் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசிடம் ஒப்படைத்து ரேஷன் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!