தமிழகம்

திருப்பரங்குன்றம் பகுதியில் முன்விரோதம் காரணமாக தொடரும் கொலைகள். 4 நாட்களில் 2 கொலைகள்

121views
நேற்று முன்தினம் தென்பரங்குன்றத்தில் கொலை செய்யப்பட்ட மணிமாறன் (36) கொலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் பின்புறம் உள்ள தென்பரம் குன்றம் பகுதியைச் சேர்ந்த விருமாண்டி மகன் மணிமாறன் (வயது 31).
இவர் நேற்று முன்தினம் இரவு கடை வாசல் முன்பு மது போதையில் தூங்கிக் கொண்டிருந்த போது அப்போது வந்த மர்ம நபர்கள் இருவர் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் தென்பரங்குன்றம் அண்ணாநகர் சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் நவீன் (வயது 29) மற்றும் இதே பகுதியை சேர்ந்த பாணாகுளம் கண்மாய் தெருவை சேர்ந்த ராஜங்கம் மகன் கண்ணன் (வயது 45) ஆகிய இருவரும் சேர்ந்து மணிமாறனை கழுத்தை கொலை செய்தது தெரிய வந்தது.
இது குறித்து தனிப்படை போலீஸார் தலைமறைவாக இருந்த இருவரையும் நேற்று கைது செய்தனர்.  போலீஸார் விசாரணையில் கடந்த ஒன்னாம் தேதி இதே பகுதியில் சுரேஷ் என்பவரை தீனா (எ) தீதையாள், விக்னேஸ்வரன் | சிங்கராஜ் ஆகிய மூவரால் கொலை செய்யப்பட்டார்.
சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் விதமாக தீனதயாளின் நண்பன் மணிமாறனை தாங்கள் கொலை செய்ததாக நவீன் மற்றும் மணிமாறன் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.  கோவில் மாநகரில் பழிக்கு பழி சம்பவமாக நான்கு நாட்களில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் தொடந்து நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உத்திரவின் பேரில் மதுரை தெற்கு காவல் துணை ஆணையர் சாய்பிரணித், காவல் உதவி ஆணையர் ரவி ஆகியோர் குற்ற நடவடிக்கை தடுக்கும் பொருட்டு, திருப்பரங்குன்றம், கிரிவலப்பாதை , தென்பரங்குன்றம் ஆகியபகுதிகளில் இரவு நேர ரோந்துபணியை அதிகரித்துள்னர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!