அறிவிப்பு

வளரி பன்னாட்டு பெண் கவிஞர் பேர மைப்பின் மூன்றாம் ஆண்டு விழா

387views
வளரி பன்னாட்டு பெண் கவிஞர் பேர மைப்பின் மூன்றாம் ஆண்டு விழா மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் மார்ச் 24ஆம் திகதி நடைபெற உள்ளது.விழா தலைமை கல்லூரி முதல்வர் முனைவர் சாந்திதேவி.  இதில் கலந்து கொள்வோர், நான்காம் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் வழக்குரைஞர் திருமிகு மாரியப்ப முரளி , பைந்தமிழ் இலக்கிய பேரவை திரு.அதிவீர பாண்டியன் கவிஞர் திருமிகு ஆதிரா முல்லை ஆகியோர்.
இந்த நிகழ்வில் வளரி கவிதை இதழின் பெண்கள் சிறப்பிதழோடு இரண்டு நூல்கள் வெளியிடப்பட உள்ளன. ஒன்று மருத்துவர் தென்றலின் “பெண் எனும் போன்சாய்” மற்றும் சுதா மாணிக்கம் எழுதிய “எல்லாவற்றிலும் தொடரும்” ஆகியன.
இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள் பங்குபெறும் பெண் விடுதலை குறித்த கவியரங்கம் நடைபெறுகிறது .  வளரி எழுத்துக்கூடம் பதிப்பில் சென்ற ஆண்டு மகடூஉ 100 பல நாடுகளில் வசிக்கும் நூறு பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு வெளியானது . அதில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், கலைமாமணி ஆண்டாள் பிரியதர்சினி, கவிஞர் செயபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பல புதிய பெண் கவிஞர்களின் படைப்புகளை தமிழ் அரங்கில் அறிமுகம் செய்து வரும் வளரி கவிதை இதழை நடத்தி வருபவர் கவிஞர்.அருணாசுந்தரராசன். கவிஞர் மீராவின் மாணவரான இவர் வளரி அமைப்பின் மூலம் 2013 முதல் ‘கவிப்பேராசான் மீரா விருது’ களை சிறந்த கவி ஆளுமைகளுக்கு வழங்கி வருகிறார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!